vegeable market price tamil vegetable price :ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் தற்போது சரக்குப் போக்குவரத்து மற்றும் சந்தை விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் தேவையான அளவுக்கு காய்கறிகளின் வரத்து உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயர்வு எதுவும் இல்லாமல் இருந்தது.
ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் தற்போது சரக்குப் போக்குவரத்து மற்றும் சந்தை விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் தேவையான அளவுக்கு காய்கறிகளின் வரத்து உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயர்வு எதுவும் இல்லாமல் இருந்தது. குறிப்பாக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளது.
வெங்காயம் கிலோ ரூ.70லிருந்து ரூ.60 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.50-லிருந்து ரூ.43 ஆகவும் குறைந்துள்ளது. இதர காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய் தலா ரூ.35, வெண்டைக்காய் ரூ.20, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.15, பாகற்காய், தக்காளி, பச்சை மிளகாய், பீட்ரூட் தலா ரூ.30, கேரட் ரூ.65, முருங்கைக்காய் ரூ.70 என விலை குறைந்துள்ளது.
மேலும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட அனைத்து காய்கறிகள் விலைகளும் குறைந்து வருகின்றன
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”