Advertisment

சந்தோஷமான செய்தி தான்.. குறைந்தது வெங்காய விலை.! காய்கறி விலை நிலவரம்

வெங்காயம் விலை மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இன்றும் விலைச் சரி

author-image
WebDesk
New Update
tomato tamil onion tamil tomato

tomato tamil onion tamil tomato

vegetable onion price today : சென்னையில் இந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே உள்ளது. ஒரு நாள் குறைந்தால் ஒரு நாள் உயர்கிறது. நேற்று கடுமையான விலையேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று (அக்டோபர் 12) 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 35 ரூபாயாக இருந்தது.

Advertisment

சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த மாதத் தொடக்கத்திலும் சில நாட்கள் காய்கறி விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. நேற்று வெங்காயம் விலை மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இன்றும் விலைச் சரிவு தொடர்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் இன்று (நவம்பர் 12) 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 45 ரூபாயாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 30 ரூபாய் குறைந்திருக்கிறது. தக்காளி நேற்றைய விலையான 15 ரூபாயிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பாகற்காய் 10 ரூபாய்க்கும், பீட்ரூட் 15 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.15

அவரைக்காய் - ரூ.20

பீன்ஸ் - ரூ.15

பீட்ரூட் - ரூ.15

பாகற்காய் - ரூ.10

கத்தரிக்காய் - ரூ.15

முட்டைகோஸ் - ரூ.5

குடை மிளகாய் - ரூ.20

கேரட் - ரூ.45

காளிபிளவர் - ரூ.20

சவுசவு - ரூ.10

தேங்காய் - ரூ.27

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment