நல்ல செய்தி : கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைக்கு காய்கறி விலை ரொம்ப கம்மி!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவானது

carrot beans tamil onion tamil
carrot beans tamil onion tamil

vegetable tamill veg tamil koyambedu : கடந்த ஓரிரு வாரத்துக்கு முன்பு வந்த ‘நிவர்’ புயல் மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக பெய்த கனமழையால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவானது. இதனால் காய்கறி விலை 2, 3 மடங்கு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மழை குறைந்து உள்ள காரணத்தால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், காய்கறிகள் விலை பெருமளவு குறைந்துள்ளது.

அதன்படி, காய்கறிகளின் விலை விவரம் :

கத்தரிக்காய் – ரூ.35 (ரூ.70), வெள்ளரிக்காய் – ரூ.10 (ரூ.20), கேரட் – ரூ.60 (ரூ.100), பீட்ரூட் – ரூ.35 (ரூ.45), பீன்ஸ் – ரூ.30 (ரூ.65), தக்காளி – ரூ.20 (ரூ.35) பச்சை மிளகாய் – ரூ.24 (ரூ.40), கோவக்காய் – ரூ.25 (ரூ.35), இஞ்சி ரூ.35 (ரூ.40), முட்டை கோஸ் – ரூ.20 (ரூ.30), சேனை கிழங்கு – ரூ.15 (ரூ.20), சேப்பங் கிழங்கு – ரூ.30 (ரூ.40), மாங்காய் – ரூ.50 (ரூ.80), நெல்லிக்காய் – ரூ.40 (ரூ.80), முருங்கைக்காய் – ரூ.50 (ரூ.70), வெங்காயம் – ரூ.40 (ரூ.60), சாம்பார் வெங்காயம் – ரூ.80 (ரூ.110).

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vegetable tamill veg tamil koyambedu tamil koyambedu market

Next Story
போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸில் வந்த மாற்றம்… இனி ரூ.50 இல்லை ரூ.500post office savings account post office account
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express