Advertisment

சென்னை காய்கறி விலை: அடேங்கப்பா... ஒரே நாளில் இவ்ளோ கூடிருச்சா?

முக்கியமான காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
carrot beans tamil onion tamil

carrot beans tamil onion tamil

vegetables onion tomato : சென்னையில் கடந்த மூன்று மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாகவே முக்கியமான காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Advertisment

இன்று (டிசட்பர் 10) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை அதிரடியாக 40 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. நேற்று இதன் விலை 20 ரூபாயாக மட்டுமே இருந்தது. இந்த திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் பீதியடைந்துள்ளனர். ஆறுதல் தரும் விதமாக வெங்காயம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கே இன்றும் விற்பனையாகிறது. ஒரு கிலோ அவரைக்காய் 30 ரூபாயாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 20 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.40

வெங்காயம் - ரூ.50

அவரைக்காய் - ரூ.30

பீன்ஸ் - ரூ.20

பீட்ரூட் - ரூ.20

வெண்டைக்காய் - ரூ.35

மாங்காய் - ரூ.60

நூக்கல் - ரூ.10

உருளைக் கிழங்கு - ரூ.40

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment