இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான விடியோகான், ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் பெற , அந்த வங்கி மேலாளரின் கணவருக்கு தங்கள் நிறுவனங்களில் ஒன்றை எழுதி தந்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு, வீடியோகான் நிறுவனத்தின் அதிபர் வேணுகோபால் தூத், நிபவர் ரின்யூபல் பிரைவேட் லிமிடட் என்னும் நிறுவனத்தை தீபக் கோச்சார் என்பவருடன் இணைந்து துவக்கியுள்ளதாக அறிவித்தார். தீபக் கோச்சார், ஐசிஐசிஐ வங்கியின் மேலாளர் சந்தா கோச்சாரின் கணவன் ஆவர்.
வேணுகோபால் தூத், தீபக் கோச்சார் இருவரும் இணைந்து தொடங்கிய இந்த நிறுவனத்திற்கு, தீபக் கோச்சார் 64கோடி கடன் வழங்கியுள்ளார். அதன் பின்பு, வேணுகோபால் இந்த நிறுவனத்தை 9 லட்சம் ரூபாய்க்குத் தீபக் கோச்சாரின் அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளார். அதற்குக் கைமாறாக தான், சரியாக 6 மாத்திற்கு பின்பு, ஐசிஐசிஐ வங்கியின் மேலாளர் சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ. 3250 கோடி கடனை அளிக்க அனுமதி வழங்கியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் கள ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு 3250கோடி ரூபாய் கடன்வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக பகிரங்க குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. வீடியோகான் நிறுவனம் பெற்று 3250 கோடி கடனில் தற்போது வரை ரூ. 2810 கோடி மீதம் செலுத்தப்படாமல் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 3250 கோடி கடன் வாரக்கடனாக அறிவிக்கப்பட்டது.
இதுக்குறித்து இந்திய எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதுக் குறித்து செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று(28.3.19) மாலை ஐசிஐசிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “ வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய 3250கோடி ரூபாய் கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளதில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்குவது என 20வங்கிகள் கொண்ட குழு முடிவெடுத்ததாகவும், மொத்தக் கடனில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு பத்து விழுக்காட்டுக்கும் குறைவானதே. மேலும் நாளிதழில் வெளியான செய்திக்கு முற்றிலும் பொய். ஐசிஐசிஐ வங்கிக்கு யாருக்கும் சலுகைகளை வழங்கவில்லை. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்”என்று விளக்கம் அளித்திருந்தது.
அதே போல் வேணுக் கோபாலும் இந்த குற்றச்சாட்டிற்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்திருந்தார். அதில், “என்னுடைய அனைத்து பங்குகளும் சட்டத்திற்கு உட்பட்டே மாற்றப்பட்டுள்ளது. எனது பங்குகளை நான் வாங்கிய விலைக்கே விற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.
ஆனால். வெளியான இரண்டு அறிக்கையிலும், வேணுக்கோபால் மற்றும் ஐசிஐசிஐ வங்கியிடம், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கேட்டப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்படவில்லை. நாளிதழில் கேட்கப்பட்ட கேள்விகள்...
1.வேணுகோபால் தூத், தீபக் கோச்சார் இருவரும் இணைந்து தொடங்கிய நிபவர் ரின்யூபல் பிரைவேட் லிமிடட் நிறுவனம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது ஏன்?
2. ஐசிஐசிஐ வங்கி, எப்படி ரூ. 3250 கோடி கடனை வாரக்கடனாக அறிவிக்க முடிந்தது.
3.தீபக் கோச்சாரின் தந்தையின் பங்கு மதிப்பு மற்றும் சந்தா கோச்சாரின் சகோதரரின் பங்கு மதிப்பு சிறுதளவு குறையாக போது, வேணுகோபாலின் பங்கு மதிப்பு விழுக்காடு மட்டும் 50 சதவீதம் குறைந்தது எப்படி?
4. ஜனவரி 2009 ஆம் ஆண்டு, நிபவர் ரின்யூபல் நிறுவனத்தின் 24,999 பங்குகளை வெறும் 2.5 லட்சத்திற்கு, வேணுகோபால் கோச்சாரின் பெயருக்கு மாற்றியதிற்கு என்ன காரணம்?
5.அதே சமயம் மார்ச் 2010 ல் நிபவர் நிறுவனம், ரூ. 64 கோடி ஐசிஐசிஐ வங்கியிடம், கடன் பெறும் போது மட்டும், வேணுகோபாலிடம் 99.9 சதவீதம் பங்குகள் இருப்பதாக தாக்கல் செய்த பத்திரத்தில் கூறியிருப்பது எப்படி?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.