Vivad se Vishwas I-T is given a target : இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே முறையாக வருமான வரியை செலுத்துகிறார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினார் நரேந்திர மோடி. தற்போது மத்திய அரசு, வருமானவரித்துறை 2 லட்சம் கோடி வரியை வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டத்தின் கீழ் வருகின்ற 45 நாட்களுக்குள் (இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள்) இந்த இலக்கினை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
இந்த மசோதா இன்னும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் அனைத்து வருமானவரித்துறை அலுவலகர்களும் இந்த இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த திட்டத்தின் கீழ் இவர்கள் வசூல் செய்யும் வரியை பொறுத்தே அவர்களுக்கான பதவி உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் வரும் இந்த திட்டத்திற்காக தனி ‘செல்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே மற்றும் நேரடி வருமான வரி ஆணையத்தின் சேர்மென் பி.சி. மோடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்னும் ஒருவாரத்தில் இந்த திட்டத்தின் கீழ் வசூழ் செய்யப்படும் வரி குறித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவாத் சே விஸ்வாஸ் மேலும், இதுவரையில் நிலுவையில் இருக்கும் 4,83,000 நேரடி வரி வழக்குகளில் தீர்வுகளை எட்டவும் முடிவு செய்துள்ளது. இதுவரை வருமான வரித்துறை நேரடியாக ரூ. 7.40 லட்சம் கோடியை மட்டுமே வசூலித்துள்ளது என்று கடந்தவாரம் சி.பி.டி.டி சேர்மன் மோடி அறிவித்தார்.வருமான வரி வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், நேரடி வருமான வரி வசூல் தொடர்பான இலக்கினை ரூ.13.35 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.80 லட்சம் கோடியாக மாற்றி, நிதித்துறை அறிக்கையில் அறிவித்தது மத்திய அரசு.
இதற்கு முன்பு, மார்ச் 31ம் தேதி 2020ம் ஆண்டுக்குள் வருமான வரி செலுத்தும் நபரின் வருமானவரிக்கான வட்டியும், அபராதத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவாத் சே விஸ்வாஸ் மசோதாவில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, இந்த இலக்கினை அடைய இரண்டு கட்டணங்களையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
கீழ் நீதிமன்றங்களில் வருமானத்துறை இது போன்ற வழக்குகளில் வெற்றி பெற்றாலும், மேல்முறையீட்டில் மதிப்பீட்டாளர் வெற்றி பெற்றாலும், Dispute வருமானவரியில் எந்த மாற்றமும் இல்லாமல் 100%மாகவே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐ.டி.ஏ.டி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அல்லது மேல்முறையீட்டில் உள்ள வழக்குகளில் மதிப்பீட்டாளர் சர்ச்சைக்குரிய வரியின் 50 சதவீதத்தை செலுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும். இந்த நிலை உருவாகும் போது கீழ் நீதிமன்றங்களில் வெற்றி பெற்ற வரி செலுத்துபவர்கள் மீதம் உள்ள 50%-த்தை செலுத்துவதன் மூலமாக வழக்கில் இருந்து வெளியேற வழி வகையை உருவாக்கித் தந்துள்ளது.
வருவாய்த்துறை செயலாளர் பாண்டே 13ம் தேதி சி.பி.டி.டி உறுப்பினர்கள், ஐ.டி. உயர் அதிகாரிகள் ஆகியோருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், Dispute வரி தொடர்பாக இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தூசிதட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என வருமான வரியை செலுத்தும் மதிப்பாட்டாளர்களை வகைப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் வருமானவரி காரணமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான முழுமையான விபரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் என்றூ அறிவிக்கப்பட்டுள்ளது.