வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா அழைப்புகள், தினமும் 2.5 ஜிபி இன்டர்நெட், தினமும் 100 எஸ்எம்எஸ் என மூன்று முத்தான பலன்களை, ரூ 255 மதிப்பிலான ப்ரீபெய்ட் பிளானில் வழங்குகிறது.
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிரடி அறிவிப்பால், ஆட்டம்கண்டு வருகிறது. நிறைய வாடிக்கையாளர்கள், வோடபோனில் இருந்து விலகி, வேறொரு நெட்வொர்க்களுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் நிறுவனத்திலேயே நீடித்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், வோடபோன், ரூ.255 ப்ரீபெய்ட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி வீதம், 70 ஜிபி இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இதோடு மட்டுமல்லாது, அளவில்லா அழைப்புகளும் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களும் வழங்கப்பட உள்ளன. வோடபோன் பிளே சப்ஸ்கிரிப்சனும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், லைவ் டிவி சேனல்கள், பாப்புலர் டிவி சேனல்களின் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை கண்டுகளிக்கலாம். இந்த சேவை முதலில் ரூ.300 மதிப்பிலான பிளானில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ.255 பிளான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 பிளானிலேயே தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது, ஆனால், ரூ.129 மதிப்புள்ள அமேசான் பிரைம் சேவை அத்துடன் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம், ரூ.299 பிளானில், தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கிவருகிறது