/tamil-ie/media/media_files/uploads/2018/01/vodafone_.jpg)
வோடஃபோன் செப்டம்பர் 30, 2024க்குள் செலுத்த வேண்டிய கடன் ரூ. 7,174 கோடி ஆகும்.
கடனில் மூழ்கியிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.8,737.9 கோடியாக அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை (அக்.26) தெரிவித்துள்ளது.
அதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு இந்நிறுவனம் ரூ.7,595.5 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. இதற்கிடையில், அக்டோபர் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் எழும் வரிப் பொறுப்புக்காக ரூ.822 கோடியை வோடஃபோன் ஐடியா (VIL) வழங்கியுள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 30, 2023 இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் வோடஃபோன் ஐடியா இந்தியா நிறுவனம் ரூ.16,566.7 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
இது குறித்து வோடஃபோன் அறிக்கையில், “நிகர செயல்பாட்டு மூலதனம் ரூ. 17,538.6 கோடியாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Vodafone Idea Q2 net loss widens to Rs 8,738 crore
மேலும், VIL இன் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு 23.44 கோடியிலிருந்து 6 சதவீதம் குறைந்து 21.98 கோடியாக உள்ளது.
இருப்பினும், நிறுவனத்தின் 4G சந்தாதாரர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 12 கோடியிலிருந்து 12.47 கோடியாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, 4G சந்தாதாரருக்கான சராசரி டேட்டா பயன்பாடு செப்டம்பர் காலாண்டில் 15.8 ஜிபியாக இருந்தது, முந்தைய ஆண்டு இதே காலத்தில் 15 ஜிபியாக இருந்தது.
செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.2,12,784.6 கோடி ஆகும். அதேநேரத்தில், VIL மீதான மொத்தக் கடனில், 1,35,130 கோடி ரூபாய் ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் செலுத்த வேண்டிய கடப்பாடுகள் மற்றும் AGR (சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்) பொறுப்பு 68,180 கோடி ரூபாய் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.