Advertisment

பார்த்து சூதானமா இருக்கலன்னா, உங்க பாக்கெட் காலி தான் - கட்டண உயர்வை அறிவித்தன முன்னணி நிறுவனங்கள்

Telecom tariffs hike: ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டண உயர்வை டிசம்பர் 3ம் தேதி முதலும், ஜியோ நிறுவனம். 6 ம் தேதி முதல் கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
airtel, airtel recharge, vodafone, vodafone recharge, reliance jio plans, airtel recharge plan hike, vodafone recharge plan hike, reliance jio recharge plan hike, airtel prepaid plan, vodafone prepaid plan, jio prepaid plan

airtel, airtel recharge, vodafone, vodafone recharge, reliance jio plans, airtel recharge plan hike, vodafone recharge plan hike, reliance jio recharge plan hike, airtel prepaid plan, vodafone prepaid plan, jio prepaid plan,, ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிரீபெய்ட், கட்டண உயர்வு, வாடிக்கையாளர்கள், அதிருப்தி

பெரும்கடன் பிரச்னையில் சிக்கி தவித்துவந்த முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள், இந்த பிரச்னையிலிருந்து விடுபட ஒரே வழி கட்டண உயர்வு என்று எண்ணி அதை உயர்த்த நாளும் குறித்துவிட்டன.

Advertisment

அதன்படி, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டண உயர்வை டிசம்பர் 3ம் தேதி முதலும், ஜியோ நிறுவனம். 6 ம் தேதி முதல் கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. 5 ஆண்டுகளுக்கு பிறகு, முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ என முன்னணி 3 நிறுவனங்களுக்கு மட்டும் நாடு முழுவதும் 900 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த கட்டண உயர்வு, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெரும்பாதகமாக அமையும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி

தொலைதொடர்பு துறையில், தங்களை வலுப்படுத்திக்கொள்ளவே, இந்த கட்டண உயர்வு என்று ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் அறிவித்துள்ள கட்டண உயர்வு

டேட்டா, இலவச அழைப்புகள் என 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பேக்கேஜ் - ரூ.249

புதிய கட்டண விகிதம் - ரூ.298

82 நாட்கள் வேலிடிட்டி பேக் - ரூ.448 ; புதிய கட்டணம் - ரூ.598

அதேபோல், குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் ரூ.35 என்ற அளவிலிருந்து ரூ.49 என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

வோடபோனில் கட்டண உயர்வு

வோடபோன் - ஐடியாவில் கட்டணம் 84 நாட்களுக்கு 569 ரூபாயாக இருந்தது. 699 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 365 நாட்களுக்கு 1,699 ரூபாயாக இருந்த கட்டணம் 2,399 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த கட்டண உயர்வின் மூலம், ஏர்டெல் நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ .7 ஆயிரம் கோடி வருவாயும், வோடபோன் நிறுவனத்துக்கு ரூ 6 ஆயிரம் கோடி வருவாயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jio Recharge Plan Vodafone Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment