வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வோடஃபோன் நிறுவனம் ரூ. 9 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடட் வாய்ஸ் காலிங் சேவை மற்றும் 100 எம்பி டேட்டாவை வழங்குகிறது.
டெலிகாம் மார்கெட்டில் ஜியோவின் வருக்கைக்கு பின்பு வந்த மாற்றங்கள் ஏராளம். ஜியோவின் வருகையால் 2ஜி யூசர்கள் கூட ஒரே நாளில் 4ஜி சேவைக்கு மாறினர். இந்த மாற்றத்தை சற்றும் எதிர்பார்க்காத மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பிஎஸ்என்எல் போன்றவை தொடர் சரிவை சந்தித்தனர்.
குறிப்பாக ஏர்செல் போட்டியை சமாளிக்க முடியாமல் கடையை இழுத்து மூடிவிட்டு சென்றது. இப்போது களத்தில் ஏர்டெல்- ஜியோ நிறுவனங்கள் கடுமையாக மோதிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான ஆஃபர்கள், ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்த போட்டியில் தற்சமயம் வோடஃபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.
சமீபகாலமாக புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வரும் வோடஃபோன் நிறுவனம் தற்போது ரூ. 9 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்ட ரூ.9 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடவே 100 எஸ் எம் எஸ்க்கள் மற்றும் 100 எம்பி டேட்டாவும் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் தேவைக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வோடஃபோனின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.