வோடஃபோன் நிறுவனம், ரெட் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 50% கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும், ஏர்டெல் ஜியோ, வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் நாள்தோறும், ரீசார்ஜ் திட்டங்களில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. டெலிகாம் நிறுவனத்திற்கு இடையேயுள்ள போட்டியில், இந்த நிறுவனங்கள் வெளியிடும் ரீசார்ஜ் ப்ளான்களால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றன.
அந்தவகையில், சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. அதே பொல், தற்போது வோடஃபோன் நிறுவனமும், ரெட் போஸ்ட்பெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுகு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி, ரெட் போஸ்ட்பெயிட் திட்டத்தில் 50% கூடுதல் 3ஜி/4ஜி டேட்டா, 500 ஜிபி வரை ரோல்ஓவர்,அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ்க்கள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.வோடஃபோன் ரெட்டில் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும், 20 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, 200 ஜிபி வரை ரோல்ஓவர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு ஆண்டு முழுக்க வோடபோன் பிளே சந்தா சேவையும் இலவசம்.
அதே போல், ரூ.499 சலுகையில் 40 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, ரூ.999 சலுகையில் 75 ஜிபி டேட்டா என முன்பை விட அதிகமான டேட்டாக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1299 சலுகையில் 100 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் ரூ.1,999 க்கு வாடிக்கையாளர்களுக்கு 200 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா ஆகியவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.