ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய வோல்ட்இ சேவையை போன்று, வோடபோன் நிறுவனமும் தற்போது வோல்ட்இ சேவையை துவக்கியுள்ளது.
ஆரம்ப கட்டமாக, இந்த சேவை டெல்லி, குஜராத், மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வோல்ட்இ சேவை மூலம் இலவச கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும், அனைத்து வகையான ஸ்மார்ட்ஃபோன்களில் இந்த வோல்ட்இ சேவையை பயன்படுத்த இயலாது.
சியோமி ரெட்மீ 4, மி மிக்ஸ் 2, மி மேக்ஸ் 2, நோக்கிய 5, நோக்கியா 8, ஹானர் 9ஐ, ஹானர் 7எக்ஸ், ஹானர் 8 ப்ரோ, சாம்சங் சி9 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் போன்ற ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இந்த வோல்ட் இ-சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் மட்டுமே இது செயல்படும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வோடபோன் நிறுவனத்தின் டேட்டா திட்டங்களில் இந்த வோல்ட்இ சேவை இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
இலவச கால் அழைப்புகளை மேற்கொள்ளும் இந்த திட்டத்தை ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய போது, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் இந்த முயற்சியில் இறங்கி வருகிறது. இதுக்குறித்து பேசியுள்ள வோடாஃபோன் நிறுவனம், டெல்லி, குஜராத், மும்பையை தொடர்ந்து அனைத்து நகரங்களுக்கும் விரைவில் வோல்ட்இ சேவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
வோடபோன் வோல்ட்இ சேவையை ஆக்டிவ் செய்யும் முறை:
> ஃபோனில் இருந்து 199 என்ற எண்ணிற்கு 4G CHECK என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அல்லது www.vodafone.in/volte லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
>இதன்படி, உங்களுக்கான 4ஜி வோல்ட்இ வேலை செய்வது உறுதி செய்யப்பட்டு விடும்.
> ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும்.
>செட்டிங்கிஸில் சென்று மொபைல் டேட்டா-விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
> இதில் எனேபிள் 4ஜி- வாய்ஸ் & டேட்டா வசதியை தேர்வு செய்ய வேண்டும்.
>வோடபோன் சிம் கார்டு 4ஜி/3ஜி/2ஜி நெட்வொர்க் மோட் சப்போர்ட் செய்யும் சிம் ஸ்லாட்டில் பொருத்தியிருக்க வேண்டும்.
>பின்பு, வோல்ட்இ சேவை ஆக்டிவ் ஆகியதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.