டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்கள், ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் நாளுக்கு நாள் புதிய புதிய ஆஃபர்கள், கேஷ் பேக் சலுகை, கிஃப்ட் வவுச்சர்கள் ஆகியவற்றை ரீசார்ஜ் திட்டங்களில் இணைத்து வழங்கி வருகிறது. அதனுடன், நாள்தோறும் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகிறது.
இந்த வகையில், மூன்று நிறுவனங்களின் முதன்மை ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதன்படி ஜியோவின் ரூ 198, ஏர்டெலின் ரூ.199, வோடஃபோனின் 199 ரீசார்ஜ் திட்டங்களில் கிட்டத்தட்ட ஒரே வகையான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜியோவின் ரூ.198 திட்டம்:
28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், நாளொன்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன்படி, மொத்தம் 56 ஜிபி டேட்டா, அளவில்லாத வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 இலவச குறுங்செய்திகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏர்டெல்லின் ரூ. 199 திட்டம்:
28 நாட்கள் செயல்படும் ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், நாளொன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன்படி வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 39.2 ஜிபி டேட்டா, அளவில்லாத லோக்கல், ரோமிங், வாய்ஸ் கால்ஸ் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
வோடஃபோனின் ரூ. 199 திட்டம்:
28 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதனுடன், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுஞ்செய்திகள், அளவில்லாத லோக்கல் மற்றும் ரோமிங் கால்ஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
மேற்கண்ட அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும், வாடிக்கையாளர்களுக்காக கூடுதல் டேட்டா பேக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.