வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பாக வோடஃபோன் நிறுவனம், ரூ. 349 க்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக திகழும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் சமீப காலமாக, ஜியோ நிறுவனத்துடன் நேரடியாக களத்தில் போட்டி போட்டு வருகிறது. டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னரே, பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வந்த அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியாக 4ஜி சேவைக்கு மாறினர்.
அதன் பின்பு, மற்ற நிறுவனங்களும் 4ஜி சேவையை வழங்க முடிவு செய்தனர். இருப்பினும், சந்தையில், பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத வோடஃபோன் தொடர்ந்து புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வோடஃபோன் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ, 349 திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
முன்னதாக ரூ.348 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகையில் ரூ.1 மட்டும் கூடுதலாக வசூலித்து 0.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.