டெலிகாம் நிறுவனத்தில் முன்னணி நிறுவனங்களாக திகழும் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் புரட்சி அனைத்து தரப்பினரையும் அன்னாந்து பார்க்க வைத்தது. 2ஜி யூசர்கள் கூட ஜியோவினால் 4ஜிக்கு மாறினார்கள். அதன் பின்பு தான் ஏர்டெல் நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர புதுமைகளை செய்தது.
இப்போது களத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை நீயா? நானா? என்ற முனைப்பில் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இரண்டு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜியோ:
28 நாட்கள் செயல்படும் ஜியோவின் ரூ. 198 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, இலவச எஸ் எம் எஸ்க்கள், அளவில்லாத காலிங் சேவை வழங்கப்படுகிறது. இதைத்தவிர நாள் 70 நாட்கள் வேலிடிட்டிக் கொண்ட ரூ. 398 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டிக் கொண்ட ரூ. 448 திட்டம், 91 நாட்கள் வேலிடிட்டிக் கொண்ட ரூ. 498 ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல்:
ஏர்டெல்லின் 28 நாட்கள் செயல்படக் கூடிய ரூ. 249 திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடவே, 82 நாட்கள் செயல்படும் ரூ. 449 திட்டத்திலும் 2ஜிபி டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.