தமிழகத்தில் வால்வோ இ எக்ஸ் 30 கார் விற்பனை: கோவையில் முன்பதிவுகள் தொடக்கம்

வால்வோ இ.எக்ஸ்.30 கார்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வால்வோ இ.எக்ஸ்.30 கார்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Car Busin

நவீன ஸ்டைலுடன் அதிக பாதுகாப்பான, பிரீமியம் தரத்திலான வால்வோ இ.எக்ஸ்.30 எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் சிறப்பு விற்பனை துவங்கி உள்ளதாக வால்வோ இந்தியா நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் வால்வோ இ.எக்ஸ்30 (Volvo EX30) என்கிற புதிய எலக்ட்ரிக் கார்விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் மற்றும் கார்களை ஓட்டி பார்க்க விரும்பும் கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்வோ இ.எக்ஸ்.30 கார்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஓட்டல் வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வால்வோ இ_எக்ஸ் ரக கார்களை வாங்க  விரும்புவோர் கார்களை ஓட்டி பார்ப்பதுடன்,கார்களின் முழு விவரங்களையும் தரும் வகையில் வால்வோ இந்தியா நிறுவன அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இது குறித்து வால்வோ கார் தமிழ்நாடு சேல்ஸ் ஹெட் விசாகன் கூறுகையில், வால்வோ இ.எக்ஸ் 30 சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்,வகைகளில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் இருப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் நஙீன வசதிகள் என அனைத்தையும் சேர்த்த கலவையாக  உருவாகி உள்ள  வால்வோ இஎக்ஸ்30 கார் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் ஒரு தனித்துவமான காராக இருக்கும். பாதுகாப்பு அம்சங்களில் அனைத்து வகை கார்களுக்கும் முன்னுதாரணமாக வால்வோ கார் இருப்பதாக கூறிய அவர், இந்த புதிய  வால்வோ இ.எக்ஸ் 30  ஆனது லெவல்-2 ADAS உடன் வருவதாக தெரிவித்தார்.

Advertisment
Advertisements

அதிக வேகத்தில் இயங்கும்போதும் பிரேக்குகள்  நிலையானதாக அதிக பாதுகாப்புடன் செயல்படுவதாக தெரிவித்த அவர்,ஓட்டுநர் உதவி அம்சங்களில் லேன்-கீப்பிங் உதவி, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை இருக்கிறது. இது ஓட்டுனர்களுக்கு  மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்குவதாகவும்,. பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆட்டோ-பார்க்கிங் போன்ற அம்சங்கள் எளிதாக காரை கையாளுவதற்கு வசதியாக இருக்கும் என அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது,வால்வோ கார் தமிழ்நாடு நிறுவன அதிகாரிகள் சரத்குமார்,அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

பி. ரஹ்மான் கோவை மாவட்டம்.

Tamil Business Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: