scorecardresearch

EPFO: கொரோனா கால முன்பணம் வேணுமா… இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

பணத்தை பெறுவதற்கு ஆதார் கார்டு, வங்கி கணக்கு, UAN கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் போதும. எவ்வித சான்றிதழ்களோ அல்லது ஆவணங்களோ சமர்பிக்க வேண்டிய தேவையில்லை.

EPFO: கொரோனா கால முன்பணம் வேணுமா… இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இச்சூழ்நிலையில், அவசர கால நிலையை சமாளிக்க பலருக்கு பணம் தேவைப்படும். முந்தைய கொரோனா அலைகளில் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வேலையின்மை ஆகியவை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இபிஎஃப்ஓ தளத்தில் பணத்தை முன்தொகை பெற்றிடும வசதியை கொண்டு வந்தது. இபிஎஃப்ஓ தளத்திலோ அல்லது உமாங் செயலி மூலமாகவோ முன்பணத்தை எடுத்திட அப்ளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது இபிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎஃப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம். குறைவான தொகைக்கும், உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும்.

பணத்தை பெறுவதற்கு ஆதார் கார்ட், வங்கி கணக்கு, UAN கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் போதுமானவை ஆகும். எவ்வித சான்றிதழ்களோ அல்லது ஆவணங்களோ சமர்பிக்க வேண்டிய தேவையில்லை. அதேபோல், இந்த முன்பணத்தை மீண்டும் திருப்பி தரவேண்டிய அவசியம் கிடையாது.

epfo இணையதளம் வாயிலாக பணத்தை பெறும் வழி

  • முதலில் https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface பக்கத்திற்கு செல்ல வேண்டும்
  • அடுத்து ஆன்லைன் சேவைகளுக்கு சென்று Claim (படிவம் -31,19,10 சி மற்றும் 10 டி) கிளிக் செய்யவும்
  • தொடர்ந்து, வங்கிக் கணக்கின் கடைசி
    4 டிஜிட்களை உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
  • இதற்குப் பிறகு Proceed for Online Claim என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது டிராப் டவுன் செய்து, PF Advance-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
  • அடுத்து உங்கள் காரணத்தைத் தேர்வு செய்யலாம்.
  • தொடர்ந்து, எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி உங்கள் முகவரியை உள்ளிடவும்.
  • இதற்குப் பிறகு ‘Get Aadhaar OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆதார் இணைக்கப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
  • உங்கள் Claim வெற்றிகரமாக ஃபைல் செய்யப்பட்டுவிடும்.

உமாங் செயலி வழியாக பணத்தை பெறும் வழிமுறை

  • முதலில் ஸ்மார்ப்போனில் உமாங் செயலியை ஒப்பன் செய்ய வேண்டும். அதில், EPFO கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, ‘Request for Advance (Covid-19)’ தேர்ந்தெடுக்க வேண்டும்
  • அடுத்து, உங்களது UAN நம்பரை பதிவிட்டு Get OTP’கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, ஓடிபியை பதிவிட்டு, லாகின் கொடுக்க வேண்டும்.
  • லாகின் ஆனதும், வங்கி கணக்கு விவரத்தை பதிவிட்டு, ட்ராப் டவுன் மெனுவில் Member Id கிளிக் செய்து, ‘Proceed for claim’கொடுக்க வேண்டும்.
  • அடுத்த திரையில், முகவரியை பதிவிட்டு next கொடுக்க வேண்டும்.
  • மீண்டும் ட்ராம் டவுன் மெனுவில் ‘Form 31’ தேர்வு செய்து, எடுக்க விரும்பும் தொகையை பதிவிட வேண்டும். காசாலோயின் நகலையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அந்த காசோலையில் பெயர், வங்கி நம்பர், ஐஎப்எஸ்சி கோட் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக தெரிகிறதா என்பது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • இறுதியாத, Declaration box டிக் செய்து, ‘Submit OTP’கொடுக்க வேண்டும். மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு ‘Submit’ button கொடுக்க வேண்டும்.

அவ்வளவு தான், பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகள் முடிவடைந்து claim பிராசஸ் நடைபெறும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Want money via covid 19 advance in epfo here are the steps