ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விருப்பமா? அப்போ இந்த 5 விஷயத்துல கவனமா இருங்க!

பங்கு சந்தைகளில் சிறப்பாக செயல்படும் டெவலப்பர்கள் சிறப்பான ரிட்டர்ன்ஸ்களை வழங்குவார்கள்

earn better returns on real estate investment : ஒரு சிறந்த முதலீட்டாளர் என்றால் அவர் முதலீட்டு அபாயங்களை தவிர்க்கும் ஒருவராக இருக்கக் கூடாது. முதலீட்டு அபாயங்களை சரியாக நிர்வகிக்க தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும். இது எப்போது உதவுகிறதோ இல்லையோ, இது நிச்சயமாக ரியல் எஸ்டேட் முதலீட்டில் நிச்சயமாக உதவும். சிறந்த ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் முக்கியமான முதலீட்டு திட்டங்களில் இதுவும் ஒன்று. தற்போது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் இந்த முக்கிய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

Developing infrastructure

எக்ஸ்பிரஸ் வே, ஹைவே, மெட்ரோ, விமான நிலையம் போன்ற பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் இடத்திற்கு அருகே முதலீடு செய்வது இன்று இல்லை என்றாலும் பிற்காலத்தில் அந்த நிலத்தின் மதிப்பு அதிக அளவில் உங்களுக்கு ரிட்டர்ன்ஸை பெற்றுத் தரும். இப்படியான கட்டமைப்பு உருவாக்கப்படும் போது அதன் அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் கட்டடங்களின் வாடகையும் மிக அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கட்டடங்கள் கட்டி விற்பனை செய்தாலும் அல்லது நல்ல வாடகைக்கு கொடுத்தாலும் உங்களின் முதலீட்டைக் காட்டிலும் கூடுதலான ரிட்டர்ன்ஸ் அல்லது வருவாயை ஈட்டித்தரும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஹப்கள்

எங்கே வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளதோ அதை நோக்கியே மக்கள் தொகையும் நகரும். மெட்ரோ மற்றும் நகர்புற பகுதிகளில் பெரும்பான்மையானோர் வசிக்க காரணம் இதுவே. எனவே இந்த வேலை உத்தரவாதங்களை உருவாக்கும் இடங்களுக்கு அருகே இருக்கும் வணிக மையங்களில் முதலீடு செய்வது நல்ல ரிட்டர்ன்ஸுக்கு வழி வகுக்கும்.

கட்டப்படும் போதே முதலீடு செய்யலாமா? கட்டடங்கள் கட்டி முடித்த பிறகு முதலீடு செய்யலாமா?

எப்போதுமோ கட்டுமானப் பணியில் இருக்கும் கட்டங்களில் முதலீடு செய்யவது உங்களுக்கு நன்மை பயக்கும். கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் போது விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆனால் ஆரம்பத்தில் அதன் Pricer Points மிகவும் குறைவாகவே இருக்கும். RERA சரியான நேரத்தில் டெலிவரி செய்வதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. எனவே கட்டுமானத்தின் கீழ் உள்ள சொத்தின் மீது முதலீடு செலுத்துவது நெகிழ்வுத்தன்மையை கொண்டிருக்கும்.

பிராண்டட் டெவலப்பர்கள்

பிராண்டட் டெவலப்பர்கள் தங்கள் திட்டத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வளமான சாதனைப் பதிவு காரணமாக வலுவான நன்பகத்தன்மையையும் அவர்கள் பெற்றிருப்பார்கள். பங்கு சந்தைகளில் சிறப்பாக செயல்படும் டெவலப்பர்கள் சிறப்பான ரிட்டர்ன்ஸ்களை வழங்குவார்கள். எனவே முதலீட்டு தேவைகளுக்காக நில பரிவர்த்தனையில் அவர்கள் நுழையும் போது அதில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறப்பான ஆதாயத்தை அளிக்கும்.

Preferred location unit

சாலைகள், பூங்காக்கள் மற்றும் குளங்களை நோக்கி இருக்கும் இடங்களில் முதலீடு செய்யும் போது யூனிட்டுகளை வாங்கும் போதே பி.எல்.சி கட்டணம் செலுத்த வேண்டும். இது முதன்முறையாக செலுத்தும் போது கூடுதலாக தெரிந்தாலும் கூட உங்களின் கட்டிடத்தை வாடகைக்கு விடும் போதோ அல்லது நிலத்தை விற்கும் போதோ குத்தகைக்கு விடும் போதோ இதன் மதிப்பும் உயர துவங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Want to earn better returns on real estate investment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express