தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் : கட்டுமான தொழிலாளர்கள் வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய மாநிலத்தில் தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் கோவையில் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய மாநிலத்தில் தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் கோவையில் வலியுறுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் :  கட்டுமான தொழிலாளர்கள் வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய மாநிலத்தில் தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் கோவையில் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12"ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்குமார் கூறியதாவது,  கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளதாகவும்

சுமார் ஐயாரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் எனவும்.

மேலும் குறிப்பாக மாநாட்டில் கட்டுமானத்துறையை ஊக்கப்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மாநாடு நடைபெற உள்ளதாகவும் குறிப்பாக நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான துறைக்கு மத்திய மாநிலத்தில் தனி அமைச்சகம் வேண்டும் எனவும் கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும் பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், வீடு மற்றும் வீட்டுமனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் நிலத்தரகர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements
publive-image

வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,வடமாநில தொழிலாளர்கள் எந்த வித பிரச்னைகளும் இல்லை எனவும்,சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாகவும்

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் எனவும்  அவர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் யுவராஜ் கண்ணன் ஜெகதீசன் ஸ்ரீதர் ராமச்சந்திரன் ராஜதுரை கணேஷ்,காவேரி பைப் நிர்வாக இயக்குனர் வினோத்சிங் ரத்தோர், பாலன், பாலகிருஷ்ணன், முகமது ரஃபீக், முத்து பிரின்ஸ், நாகராஜ், ராணி மலர்விழி, எச்.எம்.எஸ் மாநில செயலாளர் ராஜாமணி, செய்தி தொடர்பாளர் ராஜா, கவிஞர் குரு நாகலிங்கம்,  உட்பட பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: