LIC Jeevan Umang | Indian Express Tamil

பிறந்த குழந்தைக்கும் பாலிசி.. ரூ.2 லட்சம் வரை காப்பீடு.. எல்.ஐ.சி. ஜீவன் உமாங் திட்டம் தெரியுமா?

பிறந்து 3 மாதங்கள் கடந்த குழந்தைகள் மீதும் எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி எடுக்கலாம்.

Small Savings Schemes Become Attractive With Up To 8% Returns
ஒருவரின் பாலிசி பிரீமியம் செலுத்தும் காலம் முடிவடையும் போது 70 வயதாக இருந்தால், அந்த நபர் 100 வயது வரை முழுப் பலன்களையும் பெறுவார்.

எல்.ஐ.சி. உமாங் திட்டம் ஒரு ஆயுள் காப்பீடு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் வருமானம், காப்பீடு என இரட்டை பலன்களை வழங்குகிறது. மேலும் இதில் 100 நாள்கள் வரை காப்பீடு, 30 வயதில் இருந்து உத்தரவாத வருமானம் கிடைக்கிறது.

இந்தத் திட்டத்திற்கான தகுதி அளவுகோல்களில் குறைந்தபட்ச நுழைவு வயது 90 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 55 ஆண்டுகள் ஆகும். அதாவது பிறந்து 3 மாதங்கள் கடந்த குழந்தைகள் மீதும் எல்ஐசி பாலிசி எடுக்கலாம்.

எல்ஐசி ஜீவன் உமாங் திட்டத்தால் வழங்கப்படும் நன்மைகளில் இறப்பு பலன்கள், உயிர்வாழும் பலன்கள், முதிர்வு நன்மைகள் மற்றும் கடன்கள் ஆகியவை அடங்கும்.
மேலும் இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என நான்கு பிரிவுகளாக பிரீமியம் செலுத்தலாம்.

இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் வரை பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்த பிறகு, எல்ஐசி ஆண்டுதோறும் காப்பீட்டுத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்தும்.
ஒருவரின் பாலிசி பிரீமியம் செலுத்தும் காலம் முடிவடையும் போது 70 வயதாக இருந்தால், அந்த நபர் 100 வயது வரை முழுப் பலன்களையும் பெறுவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: What are lic jeevan umang policy benefits