Post Office Savings Schemes | PPF | Kisan Vikas Patra | சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு நல்ல முதலீட்டு கருவியாகும். இதில், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் தபால் நிலைய வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வருகின்றன.
இந்தத் திட்டங்கள் மத்திய அரசால் ஆதரிக்கப்படுகின்றன. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
சிறு சேமிப்பு திட்டங்கள் என்றால் என்ன?
குடிமக்கள் தொடர்ந்து சேமிக்க ஊக்குவிக்கும் வகையில் இவை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சேமிப்புக் கருவிகள் ஆகும்.
சிறு சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பு வைப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானத் திட்டங்கள் என மூன்று பிரிவுகள் உள்ளன.
சேமிப்பு வைப்புகளில் 1-3 வருட கால வைப்பு மற்றும் 5 வருட தொடர் வைப்புகளும் உள்ளன. மேலும், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் வருகின்றன.
மூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும்.
சமீபத்திய வட்டி விகிதங்கள்
அஞ்சலகங்களில் சேமிப்புக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி ஓராண்டு டெபாசிட் திட்டத்துக்கு 6.9 சதவீதமும், 2 ஆண்டுகள் டெபாசிட்டுக்கு 7 சதவீதமும், 3 ஆண்டு டெபாசிட்டுக்கு 7 சதவீதமும், 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 7.5 சதவீதமும், 5 ஆண்டு ஆர்.டி. சேமிப்பு திட்டத்துக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
அதேபோல் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு 7.7 சதவீதமும், கிஷான் விகாஸ் பத்ராவுக்கு 7.5 சதவீதமும், பிபிஎஃப்க்கு 7.1 சதவீதமும், சுகன்யா சம்மிரிதி கணக்குக்கு (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) 8 சதவீதமும், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 8.2 சதவீதமும், மாதாந்திர வருமான கணக்குக்கு 7.4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில், பிபிஎஃப் (PPF), சுகன்யா சம்ரித்தி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் தபால் அலுவலக நேர வைப்புத்தொகை உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசு மாற்றவில்லை.
5 வருட தொடர் டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“