/tamil-ie/media/media_files/uploads/2022/04/scss.jpg)
இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க, எந்தவொரு நபரும் 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
Interest rate of the SCSS account: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கிடைக்கும் நிலையான வருமான முதலீட்டு விருப்பமாகும்.
இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் ஓய்வுக்குப் பின் வழக்கமான வாழ்க்கையை பொருளாதாரத்தை உறுதிப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில், எஸ்சிஎஸ்எஸ் (SCSS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாகும். இது ஒவ்வொரு காலாண்டிலும் உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது.
நாட்டில் உள்ள எந்தவொரு சான்றளிக்கப்பட்ட வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலமாகவும் இந்தத் திட்டத்தைப் பெறலாம். இது நீண்ட காலத்திற்கு மிகவும் பயனுள்ள சேமிப்பு திட்டமாகும்.
இது கவர்ச்சிகரமான அம்சங்களையும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பையும் வழங்குகிறது.
கணக்கை தொடங்குவது எப்படி?
இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க, எந்தவொரு நபரும் 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
55 வயதைத் தாண்டியிருந்தாலும், 60 வயதுக்குக் குறைவாக இருப்பவர் மற்றும் மேல்படிப்பில் ஓய்வு பெற்றவர் SCSS கணக்கைத் திறக்கத் தகுதியுடையவர்.
மேலும், 55 வயதை எட்டிய மற்றும் SCSS விதிகளை அமல்படுத்துவதற்கு முன் ஓய்வு பெற்ற நபர்கள் SCSS திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) SCSS கணக்குகளைத் திறக்க தகுதியற்றவர்கள்.
இந்து பிரிக்கப்படாத குடும்பங்களும் (HUF) SCSS கணக்கைத் திறக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
முதலீடு தொகை வட்டி காலம்
இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச முதலீட்டுத் தொகை ரூ.1000 ஆகும். அதிகப்பட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். மேலும், இதில் 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
SCSS க்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும், இது கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது. இருப்பினும், கணக்கு வைத்திருப்பவருக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க விருப்பம் உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளை அல்லது அஞ்சல் அலுவலகக் கிளையில் ஒருவர் SCSS கணக்கைத் திறக்கலாம். வங்கி அனுமதித்தால், வங்கியின் இணைய போர்டல் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் SCSS கணக்கைத் திறக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.