Bharat Bond ETF : சிபிஎஸ்இ, பாரத் 22 எக்ஸ்சேஜ் பாண்ட் போன்ற செயல்முறையின் மூலம் மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை குறியீட்டின் (இன்டெக்ஸ்) மூலம் விற்பனை செய்து முதலீடுகளை திரட்ட வழிவகை செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாரத் பாண்ட் இ.டி.எஃப் அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.
பொதுவாக, பங்குச் சந்தையில் நாம் ஒரு நிறுவனத்தின் (உதாரணகாக, டிசிஎஸ்) பங்குகளை வாங்கி விற்போம். ஆனால், இந்த வகை பாண்ட்களில் பல அரசு நிறுவனங்கள் பங்குகள் பரவலாக்கப்பட்டு ஒற்றை பங்குகளாக (பேஸ்கட்) மாற்றப்படுகிறது.
பாரத் பாண்ட் இ.டி.எஃப் ,எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்டால் நிர்வகிக்கப்படுகிறது. பாரத் பாண்ட் என்.எஸ்.இ உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டைப் பின்தொடர்கிறது. இந்த குறியீட்டிற்கு ஏற்றார் போல் சந்தைகளில் பங்குகளின் லாபம்/நட்டம் முடிவாகும்.
பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய அரசு நிறுவனங்களில் நாம் முதலீடு செய்வதால் மிகுந்த நம்பகத் தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000. இதன் முதிர்வுக்காலம் மூன்று ஆண்டுகள் (பாரத் பாண்ட் இ.டி.எஃப்–ஏப்ரல் 2023) மற்றும் 10 ஆண்டுகள் (பாரத் பாண்ட் இ.டி.எஃப் – ஏப்ரல் 2030). இரண்டு வகையான இ.டி.எஃப் க்களுக்கும் இரண்டு வகையான குறியீட்டை என்.எஸ்.இ உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்:
நீங்கள் NFO- ன் போதே பாரத் பாண்ட் இ.டி.எஃப்க்களில் முதலீடு செய்து முதிர்ச்சி அடையும் வரை வைத்திருந்தால்,பாரத் பாண்ட் இ.டி.எஃப்–ஏப்ரல் 2023 வகைகளுக்கு 6.59% , பாரத் பாண்ட் இ.டி.எஃப் – ஏப்ரல் 2030 வகைகளுக்கு 7.52% வருடாந்திர லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த வகையில் பொதுத் துறை அரசு நிறுவனங்கள் மக்களிடம் கடன் வாங்குவதால் அவை ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பதில் தரவேன்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இதனால், அதன் நிர்வாகத் திறன் மேன்மையடையும் என்றும் நம்பப்படுகிறது.