LIC Aadhaar Shila Policy: எல்.ஐ.சி. முதலீட்டாளர்களுக்கு காப்பீடு உடன் சேமிப்பையும் வழங்குகிறது. அந்த வகையில் எல்.ஐ.சி.யில் பல்வேறு பிரத்யேக திட்டங்கள் உள்ளன.
குறிப்பாக சில டெர்ம் இன்சூரன்ஸ்களும் உள்ளன. ஆனால் நாம் தற்போது பார்க்கப் போவது எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஆயுள் காப்பீடு திட்டமாகும். மேலும் பங்குச் சந்தையோடு இணைக்கப்படாத திட்டமாகும்.
இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிதி பாதுகாப்பு மற்றும் காப்பீடு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஆதார் ஷீலா திட்டத்தில் ஒருவர் நாளொன்றுக்கு ரூ.30 வீதம் சேமிப்பு ரூ.4 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
ரூ.4 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் ஒருவர் தினந்தோறும் ரூ.30 வீதம் சேமித்தால் ஆண்டுக்கு ரூ.10950 சேமித்து இருப்பார். இது 20 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரமாக இருக்கும்.
தொடர்ந்து முதிர்ச்சியின்போது எல்.ஐ.சி. உங்களுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் வழங்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.75 ஆயிரம் வரை காப்பீடு கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் முதிர்ச்சி காலம் 10 மற்றும் 20 ஆண்டுகள் ஆகும். பிரிமீயத்தை மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனவும் கட்டிக் கொள்ளலாம்.
திட்டத்தில் தனிநபர் காப்பீடு ரூ.3 லட்சத்துக்கு அதிகமாக இருக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“