எல்ஐசி வழங்கும் ஜீவன் ஆசாத் பாலிசி ஒரு தனிநபர், சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது வரையறுக்கப்பட்ட பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டமாக செயல்படுகிறது.
இதில் பிரீமியம் செலுத்தும் காலம் (PPT) பாலிசி காலத்திலிருந்து 8 வருடங்களைக் கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பாலிசியை 20 ஆண்டுகளுக்கு எடுத்தால், பிரீமியங்கள் 12 ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தினால் போதும்.
அதேபோல, 18 வருட பாலிசி காலத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு பிரீமியங்கள் செலுத்த வேண்டும். பாலிசி காலம் முடியும் வரை உயிர் வாழும் பாலிசிதாரருக்கு முதிர்வுத் தேதியில் உத்தரவாதமான அடிப்படைத் தொகையை உறுதி செய்கிறது.
10 ஆண்டுகளுக்கு ரூ.12,083 செலுத்தும் 30 வயது நபருக்கு, பாலிசியின் முதிர்வு மதிப்பு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 2 லட்சமாக இருக்கும்.
நிகர வட்டி விகிதம் 4-5 சதவீதம். வருடாந்திர பிரீமியமானது செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களில் 105 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், இறப்புப் பலன் அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகையை விட குறைவாகவோ அல்லது வருடாந்திர பிரீமியத்தை விட ஏழு மடங்கு அதிகமாகவோ இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“