Advertisment

Pan Card: அறிந்ததும்... அறியாததும்!

How to Apply PAN Card Online, Eligibility, Procedure: ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்துக்கொள்ளக்கூடாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to download e pan

பான் கார்டு

What is PAN Card, Documents, Eligibility: நிரந்தர கணக்கு எண் என்பதன் சுருக்கமே PAN (பான்) ஆகும். அந்த எண் உள்ள அட்டையே பான் கார்டு ஆகும்.

Advertisment

வருமான வரித்துறையினரால், 10 இலக்கங்கள் கொண்ட நிரந்தர கணக்கு எண் (PAN) , விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் வழங்கப்படுகிறது.

இந்த பான் கார்டு, உங்களது அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பான் கார்டு, 18 வயதிற்கும் குறைந்தவர்களுக்கும் ( மைனர்) வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு பிரஜைகளுக்கும் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

வங்கியில் கணக்கு துவங்குவதற்கு, பான் கார்டு அவசியமாக உள்ளது.

வருமானவரி தாக்கல் செய்யும்போதும், ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணபரிவர்த்தனைகளின் போதும் பான் கார்டு அவசியமாகிறது.

ஆன்லைனில் பான் கார்டை விண்ணப்பித்து பெற முடியுமா?

ஆன்லைனில் பான் கார்டு பெற விண்ணப்பிக்க 3 ஆவணங்கள் முக்கியமானதாகும்

அடையாள ஆவணம் ( வாக்காளர் அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், துப்பாக்கி லைசென்ஸ், ஆதார் கார்டு, மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய பென்சனர் கார்டு.

முகவரிக்கான ஆவணம் : கடைசி 3 மாத எலெக்ட்ரிசிட்டி பில், லேண்ட்லைன் போன், பிராட்பேண்ட் கனெக்சன் பில், வாட்டர் பில், கேஸ் கனெக்சன் பில், பேங்க் ஸ்டேட்மெண்ட், கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட், அஞ்சலக சேமிப்பு பாஸ்புக்...

பிறந்த தேதிக்கான ஆவணம் : பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், பள்ளி டி.சி. பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்.

கட்டணம்: இந்திய குடிமகன்கள் : ரூ.116 + ஆன்லைன் புராசசிங் கட்டணம்

வெளிநாட்டு பிரஜைகள் : ரூ.1020 + ஆன்லைன் புராசசிங் கட்டணம்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் NSDL மற்றும் UTITSL இவ்விரு நிறுவனங்கள் மட்டுமே பான் கார்டு வழங்க அங்கீகரீக்கப்பட்டுள்ளன. இவைகளின் இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்திற்கு சென்று, Online PAN application பக்கத்தை தேர்வு செய்து, அதில் இந்திய பிரஜை என்றால் New PAN - Indian Citizen (Form 49A) என்றும் வெளிநாட்டு பிரஜை என்றால் New PAN - Foreign Citizen (Form 49AA) என்றும் தேர்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பவர் தனிநபர் என்றால், INDIVIDUAL என்று தேர்வு செய்ய வேண்டும்.

பின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து கப்சா கோடை உள்ளீட்டு சப்மிட் குடுக்க வேண்டும்.

பின் ஆதார் மூலமாகவோ, அல்லது e-sign அல்லது ஆவணங்ளை நேரடியாக குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உரிய முறையில் பணம் செலுத்திய பின்னர், சிறிது கால இடைவெளியில் உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்டு, தாங்கள் அளித்துள்ள முகவரிக்கு பான் கார்டு வந்தடையும்.

NSDL மற்றும் UTITSL இணையதளங்களிலோ அல்லது அதன் அலுவலகங்களையோ அணுகி, பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது...

அருகில் உள்ள NSDL மற்றும் UTITSL அலுவலகங்களுக்கு சென்று 49 A பெற்று பாஸ்போர்ட் போட்டோ, அடையாள ஆவணம், முகவரிக்கான ஆவணம், FIR copy உள்ளிட்டவைகளை இணைக்க வேண்டும். பின் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

National Securities Depository Limited,

3rd Floor, Sapphire Chambers,

Near Baner Telephone Exchange, Baner,

Pune – 411045. இந்த முகவரிக்கு அனுப்பினால் 15 நாட்களுக்குள் உங்களுக்கு அதே பான் எண்ணுடன் கூடிய புதிய பான் கார்டு கிடைக்கும்.

பான் கார்டுகளின் வகைககள்

தனிநபர் பான் எண்

நிறுவனங்களுக்கான பான் எண்

வெளிநாட்டு பிரஜைகளுக்கான பான் எண்

பான் எண் பெற விண்ணப்பித்தபிறகு, அதன் நிலையை எவ்வாறு கண்காணிப்பது

www.tin-nsdl.com இணையதளத்திற்கு சென்று PAN' கேட்டகிரியில் 'Services' என்பதை தேர்வு செய்யவும்., அதில், 'Know Status of Your Application' தேர்வு செய்யவும். application பிரிவில் உங்களது acknowledgement numberயை பதிவு செய்ஐ கப்சா கோடை பதிவு செய்து சப்மிட் குடுத்தால், உங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறியலாம்.

பான் கார்டில் போட்டோவை மாற்ற இயலுமா? முடியும்

https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html பக்கத்திற்கு சென்று PAN data” from the “Application Typeல் “Changes or Correction என்பதை தேர்வு செய்யவும். பின் கேட்டகிரியில் “Individual” தேர்வு செய்து, பின் விண்ணப்பதாரர் விபரங்களை பதிவு செய்து சப்மிட் குடுக்கவும். டோக்கன் ஏண் வரும். அதனை கொண்டு புதிய போட்டோவை மாற்றிக்கொள்ளலாம்.

பெண் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அவர் பான் கார்டு பெற விண்ணப்பிக்கையில், அவரது தந்தையின் பெயர் குறிப்பிட தேவையில்லை.

ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்துக்கொள்ளக்கூடாது. இது சட்டவிரோதம். எனேவ, ஒரு பான் கார்டை உரிய அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.

Pan Card Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment