how to apply PPF loan: ஏதேனும் ஒரு சிக்கலின் போது உங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால், உங்கள் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பி.பி.எஃப் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடு செய்தால், அதில் வட்டி பெறுவதைத் தவிர, உங்களுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
இருப்பினும், உங்கள் கடன் விண்ணப்பத்தை அளிக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய PPF கடன் தொடர்பான சில விதிகள் உள்ளன.
பெர்சனல் கடனை விட குறைந்த வட்டி
பி.பி.எஃப் (PPF) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் கடன் கொடுக்கப்படுவதால், அதற்காக நீங்கள் எதையும் அடமானம் வைக்கத் தேவையில்லை.
விதிகளின்படி, பிபிஎஃப் கணக்கின் வட்டியை விட பிபிஎஃப் கடனுக்கான வட்டி ஒரு சதவீதம் அதிகம். உதாரணமாக, உங்கள் பிபிஎஃப் கணக்கில் 7.1 சதவீத வட்டி விகிதத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், உங்கள் பிபிஎஃப் கடனுக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதம் செலுத்த வேண்டும்.
எனினும், பிபிஎஃப் கடனுடன் ஒப்பிடும்போது, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.50 சதவீதம் முதல் 17 அல்லது 18 சதவீதம் வரை இருக்கலாம்.
கடன் திருப்பி அளிக்கும் காலம்
பி.பி.எஃப் கடனைப் பெற்ற பிறகு, அதைத் திருப்பிச் செலுத்த உங்களுக்கு மூன்று ஆண்டுகள், அதாவது 36 தவணைகள் வழங்கப்படும். மேலும், குறைந்த எண்ணிக்கையிலான தவணைகளில் நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.
இது தவிர, இடையில் எங்கிருந்தாவது மொத்தத் தொகையைப் பெற்றால், ஒரேயடியாகத் தொகையைச் செலுத்தி கடனை முடிக்கலாம்.
ஆனால் 36 மாதங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அபராதமாக, உங்கள் பிபிஎஃப் தொகையின் வட்டியை விட 6 சதவீதம் கூடுதலாகக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
பி.பி.எஃப் கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் பிபிஎஃப் கணக்கின் வங்கியில் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்தால், அதற்கான படிவம் டியை நிரப்பலாம்.
படிவத்தில், நீங்கள் கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை எழுத வேண்டும். இதற்கு முன் நீங்கள் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், அதை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
அதன் பிறகு, பிபிஎஃப் பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு, வங்கி கடனை வழங்க ஒரு வாரம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“