தொழில்நுட்பத்தின் வருகையுடன், வங்கித் துறையும் மாறிவிட்டது, இதனால், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு எளிதாக நிதி பரிமாற்றம் செய்யலாம். இந்த நாட்களில், இ-வாலட்களைப் பயன்படுத்தி மொபைல் பேங்கிங் மூலம் விரைவாக பணம் அனுப்பலாம். ஆனால் ஒரு பெரிய தொகையை அனுப்ப ஒருவர் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்த வேண்டும். மொபைலில் நிதி பரிவர்த்தனை செய்வதற்கு வரம்பு உள்ளது. இந்தியாவில், தொகை மற்றும் செட்டில்மென்ட் நேரத்தின் அடிப்படையில் ஆன்லைனில் பணத்தை மாற்ற பல்வேறு வழிகள் உள்ளன.
ஆன்லைனில் நிதியை மாற்றுவதற்கான அடிப்படை தேவை
RTGS, NEFT, IMPS ஆகியவை நீங்கள் நிதியை மாற்றுவதற்கான வெவ்வேறு வழிகள். ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்ய, உங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கின் இணைய வங்கிச் சான்றுகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் உள்நுழைந்தவுடன், நீங்கள் NEFT/IMPS/RTGS சேவை மூலம் செய்கிறீர்கள் என்றால் முதலில் பதிவு செய்ய வேண்டும் அல்லது பயனாளிகளின் தகவல்களைச் சேர்க்க வேண்டும். அது சேர்க்கப்பட்டவுடன், நிதியை மாற்றுவதற்கு நீங்கள் எந்த முறைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் நிதியை மாற்ற சிறந்த வழி எது? இது நீங்கள் மாற்ற விரும்பும் தொகை மற்றும் பரிமாற்றத்தின் நேரத்தைப் பொறுத்தது. நிதியை மாற்றுவதற்கான சிறந்த முறை எது என்பதை இப்போது பார்ப்போம்.
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)
நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் சிஸ்டம் (NEFT) என்பது ஒரு மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பாகும், இது பரிவர்த்தனைகளை தொகுப்பாகத் தீர்க்கிறது. பணம், காசோலை அல்லது டிடியைப் பயன்படுத்தி வங்கிக் கிளையில் NEFT சேவையைப் பெறலாம். மேலும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நெட் பேங்கிங் வசதி NEFT சேவையைப் பயன்படுத்தலாம். NEFT மூலம் நீங்கள் அனுப்பக்கூடிய அதிகபட்ச தொகை 50,000 ரூபாய்.
ஜனவரி 1, 2020 முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் NEFT நிதி பரிவர்த்தனைகளுக்கு சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் நேரடியாக வங்கி மூலம் NEFT சேவையை பயன்படுத்த விரும்பினால், பல்வேறு அடுக்குகளைப் பொறுத்து நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். NEFT வசதிகள் இப்போது எல்லா நேரங்களிலும், அதாவது 24×7, 365 நாட்களிலும் கிடைக்கும்.
ரியல்-டைம் கிராஸ் செட்டில்மென்ட் ( RTGS )
இது ஆர்டர்-பை-ஆர்டர் அடிப்படையில் நிகழ் நேரத்தில் (உடனடியாக) நிதியை அனுப்பும் முறையாகும். வேறு விதமாகச் சொல்வதென்றால், NEFTல் செய்வது போல், நிதியை நகர்த்த அல்லது செட்டில் செய்வதற்கான கோரிக்கையானது தொகுப்பாக இல்லாமல் நேரடியாகக் கையாளப்படுகிறது. RTGS கட்டமைப்பானது பெரிய அளவு பரிவர்த்தனைகளுக்கு உகந்ததாக உள்ளது. இதன் விளைவாக, ஒரே நாளில் RTGS மூலம் அனுப்பக்கூடிய குறைந்தபட்சத் தொகை ரூ.2 லட்சமாகும். ஒரு நாளைக்கு அதிகபட்ச தொகை ரூ .10 லட்சம். ஒரு வேலை நாளில், வங்கிகள் RTGS சேவை சாளரத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுகர்வோர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும். பரிவர்த்தனையின் மதிப்பைப் பொறுத்து தொகைக்கு வங்கிகள் சேவை கட்டணம் வசூலிக்கின்றன. கட்டணங்கள் வெவ்வேறு வங்கிகள் மற்றும் பரிவர்த்தனைகளின் நேரம் ஆகியவற்றில் வேறுபடுகின்றன.
எஸ்பிஐ வங்கியின் ஆர்டிஜிஎஸ் மீதான கட்டணம்
காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் ரூ .2 லட்சம் முதல் ரூ .5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு எஸ்பிஐ கட்டணம் ரூ. 25. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 51.
எஸ்பிஐ கட்டணங்கள் பகல் 12 மணி முதல் 3:30 மணி வரை ரூ. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ. 26 மற்றும் ரூ.5 லட்சத்துக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.52
பிற்பகல் 3:30 முதல் மாலை 4:30 வரையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு எஸ்பிஐ கட்டணம் ரூ.31. மற்றும் 5 லட்சத்துக்கு மேல் ரூ. 56.
உடனடி பணம் செலுத்தும் சேவை (IMPS)
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட, IMPS 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் கிடைக்கும். அவசர காலங்களில் பணம் அனுப்ப இது சரியான வங்கி நெட்வொர்க் ஆகும், ஏனெனில் இது உடனடியாக நிதியை மாற்றுகிறது. வழக்கமான IMPS நிதி பரிமாற்ற வரம்பு ரூ. 2 லட்சம். IMPS இல், குறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு ரூபாய் 1. ஒரு மொபைல் எண் மற்றும் MMID ஐப் பயன்படுத்தி இடமாற்றங்கள் செய்யப்பட்டால், அதிகபட்ச வரம்பு ரூபாய் 10,000 மட்டுமே. IMPS நிதி பரிமாற்றம் இந்திய தேசிய பேமண்ட கழகத்தால் (NPCI) நிர்வகிக்கப்படுகிறது. தனிப்பட்ட வங்கிகள் IMPS மூலம் பணம் அனுப்புவதற்குத் தங்களுடைய சொந்தக் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. அதனை உங்கள் நிதி நிறுவனத்துடன் சரிபார்க்கவும்.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI)
UPI என்பது வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்றுவதற்கான மொபைல் அடிப்படையிலான உடனடி நிகழ்நேர கட்டண முறை ஆகும். UPI ஆனது, வெவ்வேறு வங்கிகளில் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடாமல், அவர்களின் ஆதார் தனிப்பட்ட அடையாள எண், மொபைல் ஃபோன் எண் அல்லது மெய்நிகர் கட்டண முகவரியை மட்டும் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் பெறவும் உதவுகிறது. BHIM PhonePe Google Pay ஆகியவை பிரபலமான UPI பயன்பாடுகள்.
NEFT, RTGS, IMPS, UPI: பணம் அனுப்ப சிறந்த வழி எது?
ரூ.1 லட்சத்துக்கும் குறைவான உடனடி நிதி பரிமாற்றங்களுக்கு, UPI சிறந்தது. ஏனெனில் கட்டண பரிமாற்றங்கள் இலவசம்.
ஐ.எம்.பி.எஸ் என்பது, ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் நிதியை மாற்றுவதற்கான மற்றொரு சிறந்த பேமெண்ட் பொறிமுறையாகும். ஆனால் அதிகபட்சம் ரூ. 2 லட்சத்துக்குள் மட்டுமே அனுப்ப முடியும்.
NEFT என்பது வங்கிக் கிளை மூலம் பணம் அனுப்புவதற்கான விரைவான வழியாகும். இது எதிர்கால கட்டணங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது கடன் அட்டை கட்டணங்களுக்கு ஏற்றது.
ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிமாற்றத்திற்கு RTGS சிறந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.