Sbi Fixed Deposit | பாரத ஸ்டேட் வங்கி (SBI) அம்ரித் கலாஷ் சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை பலமுறை நீட்டித்துள்ளது.
இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் வழக்கமான எஸ்.பி.ஐ வைப்புத் தொகையுடன் ஒப்பிடும்போது முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய 2024 மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். 400 நாள்கள் கால அளவுக் கொண்ட இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மற்ற எஸ்.பி.ஐ திட்டங்கள்
எஸ்.பி.ஐ க்ரீன் டெபாசிட்
எஸ்.பி.ஐ க்ரீன் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு 1111 நாள்கள், 1777 நாள்கள் மற்றும் 2222 நாள்கள் என 3 டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது.
எஸ்பிஐ சர்வோத்தம்
எஸ்பிஐ சர்வோத்தம் டெர்ம் டெபாசிட்டுகளின் கீழ், வங்கி இரண்டு வருட காலத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஓராண்டு காலத்திற்கு, வட்டி விகிதம் 7.10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் பொது முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) பெறுவார்கள்.
இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.9 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
எஸ்பிஐ வீகேர்
இந்த சிறப்பு FD மூத்த குடிமக்களின் கால வைப்புகளுக்கு கூடுதல் வட்டியை வழங்குகிறது. இது 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்பிஐ இணையதளத்தின்படி, “பொதுமக்களுக்கான கார்டு விகிதத்தை விட 50 பிபிஎஸ் மூத்தக் குடிமக்கள் அதிகமாக பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“