சுகன்யா சம்ரித்தி திட்டம் (செல்வ மகள் சேமிப்பு) பெண் குழந்தையின் பள்ளி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளைச் சேமிக்க ஊக்குவிக்கிறது.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் வட்டி
சுகன்யா சம்ரித்திக்கான வட்டி விகிதம் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களைப் போல் மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டில், 8 சதவீதமாக மாறாமல் தொடர்கிறது.
திட்டத்தின் பலன்கள்
இந்தத் திட்டத்தில் ஆண்டு குறைந்தபட்ச முதலீடு ரூ 250 ஆகும். அதேநேரம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ 1,50,000 வரை முதலீடு செய்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் ஆகும். பிரிவு 80C இன் கீழ், டெபாசிட் செய்யப்பட்ட கொள்கை, முழு காலத்தின் போது உருவாக்கப்பட்ட வட்டி மற்றும் முதிர்வு பலன்கள் அனைத்துக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
கணக்கு முதிர்ச்சி
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடைகிறது. மேலும், 18 வயதை அடைந்த பிறகு பெண் குழந்தைகளின் திருமணத்தின் போது முடித்துக் கொள்ளலாம்.
இது தவிர, கணக்கு துவங்கிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளின் பேரில் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“