ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இ.பி.எஃப் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக கார்பஸ் நிதியை உருவாக்க உதவுகிறது.
ஒரு தொழிலாளியின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி (12 சதவீதம்) ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாதமும் ஊழியரால் பங்களிக்கப்படுகிறது.
தற்போது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (இபிஎஃப்) வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உள்ளது. இதற்கிடையில், கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை நியமிப்பதை இ.பி.எஃப்.ஓ கட்டாயமாக்கியுள்ளது.
கணக்கு வைத்திருப்பவரின் அகால மரணம் ஏற்பட்டால், நாமினி அவர்களின் திரட்டப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கான உரிமையைப் பெறுவார்.
இந்நிலையில், இ.பி.எஃப் கணக்கு வைத்திருப்பவரின் மரணம் ஏற்பட்டால், நாமினி பின்பற்ற வேண்டிய ஒரு குறிப்பிட்ட செயல்முறை உள்ளது.
அந்த வகையில், நாமினி என்ன செய்ய வேண்டிய வழிமுறைகள் இங்கு உள்ளன.
நாமினி மூலம் இ.பி.எஃப் திரும்பப் பெறுதல்
- நாமினி மற்றும் இறந்த பிஃஎப் உறுப்பினர் விவரங்களுடன் இ.பி.எஃப் படிவம் 20 ஐ நிரப்பவும்.
- பி.எஃப் உறுப்பினரின் கடைசி முதலாளி மூலம் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இ.பி.எஃப்.ஓ இணையதளத்தில் இருந்து படிவம் பதிவிறக்கம் செய்யப்பட்டால், அனைத்துப் பக்கங்களிலும் முதலாளி மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர் கையொப்பமிட வேண்டும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, படிவம் 20 இன் செயலாக்க நிலை குறித்து சம்பந்தப்பட்ட நபருக்கு இ.பி.எஃப்.ஓ அமைப்பு குறுஞ்செய்தி (SMS) வரும்.
- உரிமைகோரல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு நாமினி பணம் பெறுவார். இந்தப் பணம், உரிமைகோருபவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
நாமினி நியமிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
நாமினி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், கார்பஸ் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். உறுப்பினருக்கு குடும்பம் இல்லை என்றால், அந்தத் தொகை சட்டப்பூர்வமாக உரிமையுள்ள நபருக்கு மாற்றப்படும்.
தேவையான ஆவணங்கள் என்ன?
- படிவம் 20.
- ரத்து செய்யப்பட்ட காசோலை.
- இறப்பு சான்றிதழ்.
- பாதுகாவலர் சான்றிதழ்.
- ஊழியர்களின் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டப் பலன்களைப் பெறுவதற்கான படிவம் 5(IF).
- பி.எஃப் உறுப்பினர் 58 வயதை அடையும் முன் இறந்து 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யாமல் இருந்தால், திரும்பப் பெறும் நன்மைக்கான படிவம் 10C.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“