கிஷான் விகாஸ் பத்ரா (KVP) கணக்கு வைப்புத்தொகைக்கான தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுதோறும் 7% கூட்டப்படுகிறது. டிசம்பர் 31க்குள் இந்த விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால், 2023 புத்தாண்டின் முதல் காலாண்டில் செய்யப்படும் கிஷான் விகாஸ் பத்ரா டெபாசிட்டுகளுக்கும் இது பொருந்தும்.
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுகளுக்கு இடையே, கேவிபி வைப்பாளர்கள் வட்டி விகிதத்தை அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர்.
பல வங்கிகள் கூட இப்போது KVP ஐ விட நிலையான வைப்புத் திட்டங்களில் அதிக வட்டியை வழங்குகின்றன. கடந்த காலத்தில், KVP வைப்பாளர்கள் வங்கி FDகளை விட அதிக வட்டியை பெற்றனர்.
KVP வட்டி விகிதம் 2023
மத்திய அரசு கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் திருத்துகிறது. கிஷான் விகாஸ் பத்ரா வட்டி விகிதத்தின் அடுத்த திருத்தம் டிசம்பர் 2022 இறுதிக்குள் நடைபெறும். எனவே, KVP வட்டி விகிதம் 2023 முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) டிசம்பர் 31, 2022க்குள் அறியப்படும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் பணம் 10 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களில் இரட்டிப்பாகும். இதில் நீங்கள் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தனிக் கணக்கு தொடங்கி கொள்ளும் வசதியும் உண்டு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/