HDFC WhatsApp Banking facility: ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் வாட்ஸ் ஆப் வங்கி சேவை. வங்கி கணக்கு இருப்பு (account balance), கடன் அட்டை நிலுவை (credit card outstanding) ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்.
வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே சில அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்தப்படி எளிதாக செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிதான் ஹெச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) வாட்ஸ் ஆப் வங்கி வசதி (WhatsApp Banking facility)
ஆன்லைன் மூலமாக அஞ்சல் அலுவலக RD கணக்கில் பணம் டெபாசிட் செய்வது எப்படி?
வங்கி கணக்கு இருப்பை தெரிந்துக் கொள்வது, உங்கள் கடன் அட்டையில் கிடைக்கக்கூடிய கடன் வரம்பை தெரிந்துக் கொள்வது அல்லது ஒரு வங்கி கிளையின் IFSC code ஐ கண்டுபிடிப்பது போன்றவை உட்பட இன்னும் பல வங்கி சேவைகளை ஹெச்டிஎப்சி வங்கியின் வாட்ஸ் ஆப் வங்கி சேவை வழங்குகிறது.
வாட்ஸ் ஆப் வங்கி சேவையின் நன்மை என்பது, அடிப்படை வங்கி சேவைகள் 24 மணி நேரமும் வங்கி விடுமுறை நாட்களிலும் கூட கிடைக்க வழி செய்வதாகும். இதற்காக வங்கி எந்த கட்டணத்தையும் தனியாக வசூலிப்பதில்லை.
வாட்ஸ் ஆப் வங்கி சேவைகள்
மற்றவைகளைப் போல ஹெச்டிஎப்சி வங்கி வாட்ஸ் ஆப் வங்கி சேவை சேமிப்பு கணக்கில் இருப்பை சரிப்பார்ப்பது அல்லது mini statement ஐ பார்ப்பது போன்றவற்றை கணக்குதாரர் செய்ய அனுமதிக்கிறது. ஒருவர் சமீபத்திய கணக்கு அறிக்கையை (latest account statement) கோருவது மற்றும் புதிய செக் புக் (cheque book) பெற விண்ணப்பிப்பது போன்றவற்றையும் இதில் செய்யலாம். ஹெச்டிஎப்சி வங்கி கடன் அட்டை வைத்திருப்பவர்கள் நிலுவையில் உள்ள இருப்பை தெரிந்துக் கொள்வது மற்றும் அட்டை அறிக்கை (card statement) ஆகியவற்றையும் கோரலாம். FD summary மற்றும் வீட்டு கடன், வாகன கடன் பெற என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும் போன்ற தகவல்களையும் வங்கியை இந்த வாட்ஸ் ஆப் வங்கி சேவை மூலம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். மேலும் வங்கி முக்கியமான updates, பரிவர்த்தனை alerts போன்றவற்றையும் வாட்ஸ் ஆப் வங்கி சேவை மூலம் அனுப்பும்.
ஹெச்டிஎப்சி வங்கி வாட்ஸ் ஆப் வங்கி சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?
Step 1 பதிவு
பதிவு செய்வதற்கு ஒருவர் 7065970659 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அல்லது SUB என்று குறுஞ்செய்தியை (SMS) வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் மூலமாக அஞ்சல் அலுவலக RD கணக்கில் பணம் டெபாசிட் செய்வது எப்படி?
Step 2. Begin Using
அதன்பிறகு 70659 70659 என்ற எண்ணை உங்கள் contacts ல் add செய்து ‘Hi என்று குறுஞ்செய்தி அனுப்பவும்.
Safety and security
உங்களுடைய வங்கி கணக்கு விவரங்கள் வேறு யாருடனும் பகிரப்படாது என்று வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ரகசிய விவரங்களான PIN அல்லது கடவுச்சொல் (password) ஆகியவற்றை வாட்ஸ் ஆப்பில் உள்ளீடு செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.