Loan Against Fixed Deposits | திடீர் பணத்தேவை ஏற்படும் போது, அந்தத் தேவையை சேமிப்பிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என நம் மனதில் முதலில் தோன்றும்.
பெரும்பாலான மக்கள் கடன்களைத் தவிர்க்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அவர்கள் நினைப்பதில் சரியாக இருக்கலாம், ஆனால் சில சமயங்களில், கடன் வாங்குவது நன்மை பயக்கும்.
உங்களிடம் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) இருந்தால், உங்களுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் எஃப்டியை முறிப்பது சரியானது, ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் எஃப்டி மீது கடன் வாங்கலாம்.
எஃப்.ஐ.யை முறிப்பதால் தீமைகள்
நீங்கள் 2 வருடங்களாக FD செய்துள்ளீர்கள், அதற்கு உங்களுக்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வங்கி 1 வருட FD க்கு சுமார் 6.5 சதவிகிதம் வட்டி கொடுக்கலாம்.
இது தவிர சில வங்கிகள் பல்வேறு கட்டணங்களையும் வசூலிக்கின்றன. இதனால், FDக்கு சுமார் 5.5 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும்.
நன்மைகள்
நீங்கள் FDக்கு எதிராக கடன் வாங்கினால், அது சாதாரண தனிநபர் கடனை விட மலிவானதாக இருக்கும்.
நீங்கள் 7 சதவீத வட்டி பெறுகிறீர்கள் என்றால், அதற்கு 1.5-2 சதவீதம் கூடுதல் வட்டியில் கடன் கிடைக்கும். அதாவது, நீங்கள் 8.5-9 சதவீத வட்டியில் FDக்கு எதிராக கடன் பெறுவீர்கள்.
இந்த வழியில், நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டும் என்று இப்போது நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் செய்த சேமிப்பு பாதுகாப்பாக இருக்கும் மற்றும் முதிர்வு வரை தொடரும்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“