Epfo Update | நடப்பு நிதியாண்டு(FY24)க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி எப்போது வரவு வைக்கப்படும்? இந்த விவகாரத்தில் இ.பி.எஃப்.ஓ பதில் என்ன?
கடந்த நிதியாண்டில் ஓய்வூதிய நிதி அமைப்பு வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 8.25% ஆகவும், முந்தைய ஆண்டில் 8.15% ஆகவும் உயர்த்தியது.
கடந்த 3 ஆண்டுகளில் இபிஎஃப் டெபாசிட்டுகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் இதுவாகும். இபிஎஃப்ஓ உள்ள ஊழியர்கள் தங்கள் கணக்குகளில் வட்டி வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஊழியர்களின் கணக்குகளில் இபிஎஃப்ஓ வட்டி எப்போது கிடைக்கும்?
2023-24 நிதியாண்டிற்கான தனது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகை எப்போது கிடைக்கும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் இபிஎஃப்ஓ விடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த, ஓய்வூதிய நிதி அமைப்பு, செயல்முறை நடைபெற்று வருவதாகவும், ஊழியர்களுக்கு இபிஎஃப் வட்டி "விரைவில்" அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் பதிலளித்தது.
இபிஎஃப்ஓ வட்டி முடிவு செயல்முறை:
இபிஎஃப்ஓ இன் மத்திய அறங்காவலர் குழு (CBT),பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை பரிந்துரைக்கிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இபிஎஃப் மீதான வட்டி விகிதத்தை எஃப்ஒய்24 க்கு(FY24) 8.25% ஆக உயர்த்த முடிவெடுத்தது.
ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளிலிருந்து பின்வரும் முறையில் மாதந்தோறும் இயங்கும் நிலுவைகளின் அடிப்படையில் உறுப்பினரின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுகிறது.
இபிஎஃப்ஓ இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?
இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தி தங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.
ஆன்லைனில் இருப்பைச் சரிபார்க்க, உறுப்பினர்கள் இபிஎஃப்ஓ போர்டல் அல்லது யுஎம்ஏஎன்ஜி செயலியை பயன்படுத்தலாம்.
மேலும், எஸ்எம்எஸ் மூலமாகவும், ஆஃப்லைன் முறையில் மிஸ்டு கால் மூலமாகவும் இருப்பைச் சரிபார்க்கலாம்.
இபிஎஃப்ஓ உறுப்பினர் பாஸ்புக் போர்டல்:
– இபிஎஃப்ஓ உறுப்பினர் பாஸ்புக் போர்ட்டலைப் பார்வையிடவும்.
- யுஏயன் மற்றும் பாஸ்வேர்ட் இட்டு லாகின் செய்யவும்.
- பிஎஃப் அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும் (பல கணக்குகள் இருந்தால்).
- பரிவர்த்தனை வரலாறு மற்றும் தற்போதைய இருப்பைக் காண ‘பிஎஃப் பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- மாற்றாக, வருடாந்திர பங்களிப்புச் சுருக்கங்களைச் சரிபார்க்க, 'வியூ பாஸ்புக்-கை (புதிய: ஆண்டுதோறும்)' தேர்வு செய்யவும்.
உமாங் ஆப்
உமாங் செயலியை பதிவிறக்கவும்.
- ஆப்பில் 'இபிஎஃப்ஓ ' பகுதிக்குச் செல்லவும்.
- இபிஎஃப் இருப்பைக் காண யு.ஏ.யன். மற்றும் பாஸ்வேர்டுடன் லாகின் செய்யவும்.
ஆஃப்லைனில் உங்கள் இபிஎஃப் இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?
எஸ்எம்எஸ்
7738299899 என்ற எண்ணுக்கு இபிஎஃப்ஓஎச்ஓ யுஏயன் இயன்ஜி (இயன்ஜி என்பது ஆங்கில மொழி தேர்வு) வடிவத்தில் எஸ்எம்எஸ் அனுப்பவும்.
உங்கள் யூஏஎன் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிஸ்டு கால்
இருப்புத் தொகையை அறிய, உங்களின் யு.ஏ.என். உடன் இணைக்கப்பட்ட உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
இ.பி.எஃப். இருப்பு விவரங்களைக் காட்டும் எஸ்எம்எஸ் ஒன்றைப் பெறுவீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.