Employees Provident Fund (EPF) Interest Rate 2022-23: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23க்கான EPF வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23ஆம் ஆண்டு EPF பங்களிப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்து உள்ளது.
இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட விகிதம் இன்று (செவ்வாய், மார்ச் 28) அறிவிக்கப்பட்டது.
திங்கள்கிழமை (மார்ச் 27) தொடங்கிய EPFO இன் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) இரண்டு நாள் கூட்டம் முடிந்த பிறகு, திருத்தப்பட்ட EPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் EPFO கூட்டம் நடைபெற்றது.
2022-23 ஆம் ஆண்டிற்கான EPFO வட்டி விகிதத்தை அதிகரிக்க CBT முடிவு செய்தால், நாட்டில் சுமார் 5 கோடி EPF சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.
முன்னதாக, 2021-22 இல் செய்யப்பட்ட டெபாசிட்டுகளுக்கான EPF வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத குறைந்த PF வட்டி விகிதமாகும்.
இதையடுத்து, 2021-22 இல், EPFO வட்டி விகிதம் 8.5%. ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக EPFO விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வந்தன.
2019-2 நிதியாண்டில் மார்ச் 2020 இல் அறிவிக்கப்பட்ட EPFO வட்டி விகிதம் 8.5% ஆகும். 2018-19 நிதியாண்டில், EPF விகிதம் 8.65% ஆக இருந்தது. 2013-14 இல், EPFO 8.75% வட்டி விகிதத்தை வழங்கியது.
தற்போது 8.15 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“