SBI vs HDFC Bank Fixed Deposit Interest Rates 2023: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் சமீபத்தில் நிரந்தர வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
FD விகித உயர்வு மூத்த குடிமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் ஓய்வூதிய கார்பஸின் குறிப்பிடத்தக்க பகுதியை வங்கிகள் வழங்கும் பல்வேறு கால வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
இதற்கிடையில், நீண்ட காலத்திற்குப் பிறகு, மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்கள் 7.5% ஆக உயர்ந்துள்ளன.
இதன் மூலம், வங்கி எஃப்டி மூலம் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டிய காலமும் குறைந்துள்ளது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வழங்கும் எஃப்டிகள் மூலம் மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை இரட்டிப்பாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்
எஸ்.பி.ஐ. வங்கி தற்போது மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது. இதனால், ரூ.50,000 டெபாசிட்டின் முதிர்வு மதிப்பு 10 ஆண்டுகளில் ரூ.1,05,117 ஆக மாறும்.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
வங்கி தற்போது மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியை வழங்குகிறது, இதனால், ரூ.50,000 டெபாசிட்டின் முதிர்வு மதிப்பு 10 ஆண்டுகளில் ரூ.1.07 லட்சத்துக்கு மேல் ஆகிவிடும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தற்போது மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியை வழங்குகிறது.
ரூ.50,000 டெபாசிட்டின் முதிர்வு மதிப்பு 10 ஆண்டுகளில் ரூ.1.05 லட்சத்துக்கும் அதிகமாக மாறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/