பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (SSY) ஆகியவை நல்ல வட்டி விகிதங்களை வழங்கும் அரசாங்க சேமிப்புத் திட்டங்களாகும்.
அந்த வகையில், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (SSY), PPF ஐ விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது என்றாலும், நீண்ட காலத்திற்கு ஒரு கார்பஸை உருவாக்க இரண்டும் பொருத்தமானது.
கட்டுப்பாடு
10 வயதுக்குட்பட்ட பெண்ணின் பெற்றோர் மட்டுமே SSY கணக்கைத் தொடங்க முடியும். PPF கணக்கிற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
திட்டத்தின் காலம்
ஒரு SSY கணக்கின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் மற்றும் PPF க்கு 15 ஆண்டுகள் ஆகும். ஒருவர் PPF இருப்புக்கு எதிராக கடன் பெறலாம், ஆனால் SSY விஷயத்தில் அது சாத்தியம் அல்ல.
மகள் திருமணமாகி 18 வயதுக்கு மேல் இருந்தால், முதிர்வு காலத்திற்கு முன்பே SSY கணக்கை மூடலாம். ஒரு PPF கணக்கை 15 வருடங்களின் ஆரம்ப காலத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த விருப்பம் SSYக்கு இல்லை.
முதலீடு
இரண்டிற்கும் ஆண்டுக்கு அதிகபட்ச முதலீடு ரூ.1.5 லட்சம். PPFக்கான குறைந்தபட்சத் தொகை ரூ.500 ஆகவும், எஸ்எஸ்ஒய்க்கு ரூ.250 ஆகவும் உள்ளது.
கணக்கை தொடங்குவது எப்படி?
இரண்டையும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் திறக்கலாம். கணக்கிற்கான பணப்பரிமாற்றங்கள் ஆன்லைனில் செய்யப்படுவதால், வங்கியுடன் நிர்வகிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது.
போஸ்ட் ஆஃபீஸ் கணக்கிற்கான ஆன்லைன் பணப் பரிமாற்றங்களைச் செய்ய, ஒருவர் போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்புக் கணக்கைத் திறந்து, அங்கிருந்து மாற்ற வேண்டும். மேலும், பிபிஎஃப் கணக்கிற்கு, ஏழாவது ஆண்டில் ஓரளவு திரும்பப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“