மக்களின் முதலீட்டு திட்ட பட்டியலில் வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட் தான் விருப்பமான ஒன்றாக உள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீட்டுக்கு பங்கம் இல்லாத ஒரு திட்டம். முக்கியமான முதலீடுகளில் ஒன்று பிக்ஸட் டெபாசிட். பெரும்பாலும் முதலீட்டின் கால வரம்பு, வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் மாறுவதில்லை. பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிகளுக்கும் வேறுபடுகின்றன. இதே வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. பொதுவாக இந்த பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான கால வரம்பு 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. நீங்கள் குறுகிய கால முதலீடுகளை விரும்பினால் ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளை தேர்ந்தெடுக்கலாம். தற்போது அதிக வட்டி தரும் 5 வங்கிகள் என்ன என பார்க்கலாம்.
தனியார் வங்கியின் பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.1 % வரை வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக ஆர்பிஎல் வங்கியில் 6.10%, இந்துஸ்இந்த் வங்கியில் 6% வட்டியும் வழங்கப்படுகிறது. இது பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். ரூ.2கோடிக்கு உட்பட்ட ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ஆர்பிஎல் வங்கியில் 2021 ஜூன் 1 முதல் ரெகுலர் FD- 6.10%, மூத்த குடிமக்களுக்கு- 6.60%
இந்துஸ்இந்த் வங்கி யில் 2021 ஜூன் 4 முதல் ரெகுலர் FD- 6.00%, மூத்த குடிமக்களுக்கு- 6.50%
எஸ் வங்கியில் 2021 ஜூன் 3 முதல் ரெகுலர் FD- 6.00%, மூத்த குடிமக்களுக்கு- 6.50%
டிசிபி வங்கியில் 2021 மே 15 முதல் ரெகுலர் FD- 5.70%, மூத்த குடிமக்களுக்கு- 6.20%
பந்தன் வங்கியில் 2021 ஜூன் 7 முதல் ரெகுலர் FD- 4.50%, மூத்த குடிமக்களுக்கு- 5.25% வட்டியாக வழங்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளின் FD வட்டி விகிதங்கள்
யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கி ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்குகிறது. முன்னணி வங்கியான எஸ்பிஐ 4.40% வட்டி வழங்குகிறது. ரூ.2கோடிக்கு உட்பட்ட ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் பொதுத்துறை வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
யூனியன் வங்கி 2020 டிசம்பர் 15 முதல் ரெகுலர் FD -5.25%, மூத்த குடிமக்கள்- 5.75%
கனரா வங்கி 2021 பிப்ரவரி 8 முதல் ரெகுலர் FD -5.20%, மூத்த குடிமக்கள்- 5.70%
பஞ்சாப் & சிந்த் வங்கி 2021 மே 16 முதல் ரெகுலர் FD -5.15%, மூத்த குடிமக்கள்- 5.65%
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி 2020 நவம்பர் 9 முதல் ரெகுலர் FD -4.90%, மூத்த குடிமக்கள்- 5.40%
பேங்க் ஆப் இந்தியா 2021 ஜூன் 1 முதல் ரெகுலர் FD -4.50%, மூத்த குடிமக்கள்- 5.00% வட்டியாக வழங்குகிறது.
சிறு நிதி வங்கிகளின் வட்டி விகிதங்கள்
ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூ.2கோடிக்கும் குறைவான ஒரு வருட பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி வழங்கும் 5 ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பற்றி பார்க்கலாம்.
உட்கார்ஷ் சிறு நிதி வங்கி 2020 அக்டோபர் 19 முதல் ரெகுலர் FD -6.75%, மூத்த குடிமக்கள்- 7.25%
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி 2021 மார்ச் 05 முதல் ரெகுலர் FD -6.50%, மூத்த குடிமக்கள்- 7.00%
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி 2021 ஜூன் 01 முதல் ரெகுலர் FD- 6.35%, மூத்த குடிமக்கள்- 6.50%
ஜனா சிறு நிதி வங்கி 2021 மே 07 முதல் ரெகுலர் FD- 6.25%, மூத்த குடிமக்கள்- 6.75%
சூர்யோதே சிறு நிதி வங்கி 2021 பிப்ரவரி 15 முதல் ரெகுலர் FD- 6.25%, மூத்த குடிமக்கள்- 6.75% வட்டியாக வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.