பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பாகவும், உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானத்தையும் தருவதால் இந்த திட்டம் பிரபலமாக அறியப்படுகிறது. இது உங்கள் பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது என பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளிலேயே யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கி 3 வருட FD கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்குகிறது.
ரூ.2கோடிக்கும் குறைவான FD கணக்குக்கான வட்டி விகிதங்கள்:
யூனியன் பேங்க் ஆப் இந்தியா : ரெகுலர் FD -5.50%, மூத்த குடிமக்களுக்கான FD- 6.00%
கனரா வங்கி : ரெகுலர் FD -5.40%, மூத்த குடிமக்களுக்கான FD- 5.90%
பேங்க் ஆஃப் இந்தியா : ரெகுலர் FD -5.30%, மூத்த குடிமக்களுக்கான FD- 5.80%
பஞ்சாப்&சிந்த் பேங்க் : ரெகுலர் FD -5.15%, மூத்த குடிமக்களுக்கான FD- 5.65%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா : ரெகுலர் FD -5.10%, மூத்த குடிமக்களுக்கான FD- 5.60%
3 வருட FD கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகள்
டிசிபி வங்கி, இந்துஸ்இந்த் மற்றும் ஆர்பிஎல் வங்கி போன்ற தனியார் வங்கிகள் ரூ.2கோடிக்கும் குறைவான மூன்று வருட FD கணக்குகளுக்கு நல்ல வட்டி வழங்குகிறது.
டிசிபி வங்கி : ரெகுலர் FD -6.50%, மூத்த குடிமக்களுக்கான FD- 7.00%
இந்துஸ்இந்த் வங்கி : ரெகுலர் FD -6.50%, மூத்த குடிமக்களுக்கான FD- 7.00%
ஆர்பிஎல் வங்கி : ரெகுலர் FD -6.10%, மூத்த குடிமக்களுக்கான FD- 6.60%
எஸ் வங்கி : ரெகுலர் FD -6.00%, மூத்த குடிமக்களுக்கான FD- 6.50%
பந்தன் வங்கி : ரெகுலர் FD -5.75%, மூத்த குடிமக்களுக்கான FD- 6.50%
ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மூன்று வருட FD கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்குகிறது. இது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் வட்டியை விட அதிகம்.
சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் வங்கி : ரெகுலர் FD -7.00%, மூத்த குடிமக்களுக்கான FD- 7.50%
உஜ்வன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ரெகுலர் FD -6.75%, மூத்த குடிமக்களுக்கான FD- 7.25%
ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி : ரெகுலர் FD -6.50%, மூத்த குடிமக்களுக்கான FD- 7.00%
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி : ரெகுலர் FD -6.50%, மூத்த குடிமக்களுக்கான FD- 7.00%
ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி : ரெகுலர் FD -6.35%, மூத்த குடிமக்களுக்கான FD- 6.85%
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil