மூத்த குடிமக்களுக்கு பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. இதனால் அவர்கள் ஓய்வுக்குப் பிந்தைய நிதி இலக்குகளை எளிதாக நிறைவேற்ற முடியும்.
அந்த வகையில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை ஆகியவை வயதானவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய இரண்டு நம்பிக்கைக்குரிய முதலீட்டு திட்டங்கள் ஆகும்.
60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் நல்ல வருமானத்தைப் பெற மொத்தத் தொகையை முதலீடு செய்ய உதவும் ஓய்வூதியப் பயன் திட்டமாக SCSS இருந்தாலும், மூத்த குடிமக்கள் எஃப்.டி என்பது சாதகமான வட்டி விகிதங்களைக் கொண்ட கால வைப்புத் திட்டமாகும்.
மேலும், SCSS மற்றும் FDகள் இரண்டும் லாக்-இன் காலம் போன்ற சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், இரண்டிற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் அம்சங்கள்
இது மத்திய அரசின் ஆதரவு முதலீட்டுத் திட்டமாக இருப்பதால் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது.
சந்தாதாரர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
ஐந்தாண்டுகள் முடிவடைந்தவுடன் திட்டம் முதிர்ச்சியடைகிறது, ஆனால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
SCSS கணக்கைத் திறப்பது மிகவும் எளிது. தனிநபர்கள் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையங்களுக்குச் சென்று இந்தக் கணக்கை திறந்துகொள்ளலாம்.
குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 1,000, அதன் பிறகு ரூ.1,000 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதன்படி, ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு திட்டத்தின் அம்சங்கள்
சாதாரண ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் சிறப்பு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பொதுவாக, வயதான வாடிக்கையாளர்களுக்கு 0.5 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கப்படும்.
முதலீட்டாளர்கள் வட்டித் தொகையை வரவு வைப்பதற்கு வெவ்வேறு விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு. மாதாந்திர வட்டி என பேஅவுட்களை வழக்கமான வருமானமாக மாற்றலாம்.
5 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால அவகாசம் கொண்ட குறிப்பிட்ட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும்.
வேறுபாடு
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கிறது.
ஆனால் ஒரு டெர்ம் டெபாசிட் குறைந்த வட்டி விகிதத்தை அளிக்கும். ஐந்து வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் வரி பலன்கள் கிடைக்காது. தொடர்ந்து, SCSS அதிகபட்ச முதலீட்டில் வரம்பைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் FDகள் பெரிய தொகைகள் மற்றும் நெகிழ்வான காலங்கள் உட்பட பல விருப்பங்களுடன் வருகின்றன.
எந்த முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த எந்த முடிவும் இறுதியில் முதலீட்டாளர்களின் நிதி இலக்குகள் மற்றும் அவர்கள் முதலீடு செய்ய விரும்பும் பணத்தைப் பொறுத்தது ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“