Advertisment

28 அப்பார்ட்மென்ட்-களை வாங்கிய டி மாட் அதிபர்: மும்பை குடியிருப்பு மட்டும் இத்தனை கோடியா?

டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமனி, மும்பையில் ரூ.1,238 கோடி மதிப்பில் 28 அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
May 07, 2023 15:39 IST
New Update
Who is billionaire Radhakishan Damani Take a look at 28 apartments his family bought for Rs 1238 crore

டி மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமனி

இந்தியாவின் முக்கிய நகரங்களில் டி-மார்ட் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில் சோப்பு, சீப்பு முதல் மளிகை சாமான் பொருள்கள் வரை அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

இந்த டி-மார்ட்டின் நிறுவனர் ராதாகிஷன் தமனி ஆவார். இவர் தற்போது மும்பையில் ரூ.1238 கோடி மதிப்பில் 28 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ராதாகிஷனின் சொத்து மதிப்பு ரூ.13,568 கோடிகள் ஆகும். மும்பையில் ராதாகிஷன் வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏராளமான வசதிகள் உள்ளன.

முன்னதாக, 2021ல், ராதாகிஷன் தமனி மற்றும் அவரது சகோதரர் கோபிகிஷன் தமனி ஆகியோர் மும்பையின் மலபார் ஹில்லில் 90 ஆண்டுகள் பழமையான இரண்டு மாடி பங்களாவை ரூ.1001 கோடிக்கு வாங்கினார்கள்.

இந்த 5752.22 சதுர மீட்டர் சொத்துக்கு ஒரு சதுர அடிக்கு 1,61,670 ரூபாய்க்கு ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. சமீப காலத்தில் ராதாகிஷன் தமானி சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு சொத்துக்களை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment