scorecardresearch

ஒருமுறை முதலீடு, ரூ.2.32 லட்சம் ரிட்டன்.. மகளிருக்கான பிரத்யேக போஸ்ட் ஆபிஸ் திட்டம்

மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Pay premium once and get Rs 124000 pension
சாரல் பென்ஷன் யோஜனாவில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 எடுக்க வேண்டியது அவசியம்

நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை நினைவு கூரும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கென பிரத்யேக சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டத்தில் பெண்கள் அல்லது சிறுமியர் பெயரில் ரூ.2 லட்சம் வரை 2 ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்யலாம்.

இதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கிகளுடன் ஒப்பிடுகையில் நல்ல வட்டி ஆகும். இந்தத் திட்டத்தில் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், முதல் ஆண்டு ரூ.15,427ம் இரண்டாம் ஆண்டும் அதே வட்டியும் கிடையும்.
ஆக நீங்கள் செய்த முதலீடு இரண்டே ஆண்டுகளில் ரூ.2.32 லட்சமாக பெருகிவிடும்.

இந்தத் திட்டத்தில் முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படுமா? அல்லது வட்டிக்கு வரி பிடித்தம் உண்டா? என்பன போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
இருப்பினும் இத்திட்டத்துக்கு வரி விலக்கு கிடைக்கும் என்றே பலரும் நினைக்கின்றனர்.

இந்தத் திட்டம் ஒவ்வொரு அஞ்சல் அலுவலகங்களிலும் குறிப்பிட்ட நாள்களுக்கு கிடைக்கும். இத்திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்குகிறது.
முதலீட்டாளர்கள், பெண்கள், சிறுமிகள் பெயரில் முதலீடு செய்து நல்ல ரிட்டன் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Who should invest in the mssc scheme

Best of Express