நியூசிலாந்தில் குடியேற விரும்பும் இந்தியர்கள்... காரணம் என்ன?

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை தேடும் இந்தியர்களை நியூசிலாந்து ஈர்த்து வருவதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக இந்தியர்களும் நியூசிலாந்தில் குடியேற விரும்புகின்றனர்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை தேடும் இந்தியர்களை நியூசிலாந்து ஈர்த்து வருவதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக இந்தியர்களும் நியூசிலாந்தில் குடியேற விரும்புகின்றனர்.

author-image
WebDesk
New Update
Newzealand visa

சமீபத்திய ஆண்டுகளில் பல இந்தியர்கள் நியூசிலாந்தில் குடியேற விரும்புகின்றனர். இந்தியாவில் இருந்து மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் நியூசிலாந்து முழுவதும் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.  AEWV என்று சொல்லப்படும் அங்கீகரிக்கப்பட்ட வேலை வழங்குநர் பணி விசா திட்டம் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த இத்திட்டம் உந்துசக்தியாக விளங்குவதாக பலர் கூறுகின்றனர்.

இந்தியர்கள் இத்திட்டத்தின் மூலம் பெறும் நன்மைகள்:

Advertisment

இத்திட்டம் மூலம் இந்தியர்கள் தங்கள் விரும்பிய வகையில் பலதரப்பட்ட கலாசாரத்தில், இயற்கை சூழலில் வாழவும், பணியாற்றவும் வாய்ப்பளிக்கிறது. மேலும், இது பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைகிறது. 

இதற்காக பணியாளர்கள் மூன்று அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். AEWV மூலம் புலம்பெயர்ந்த ஊழியர்களை பணியமர்த்துவதற்கு முன், நிறுவனம் முதலில் இமிக்ரேஷன் நியூசிலாந்து அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

இரண்டாவதாக, அந்த பதவிக்கு தகுதியான எந்த நியூசிலாந்து நாட்டினரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும், அவர்கள் ஊதியம் மற்றும் நிபந்தனை தரநிலைகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதையும் நிரூபிக்க  வேண்டும்.

Advertisment
Advertisements

மூன்றாவதாக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்புடன் கூடிய ஆன்லைன் விசா விண்ணப்பத்தை, தொழிலாளி சமர்ப்பிக்க வேண்டும் 

நியூசிலாந்திற்கு இந்தியர்கள் குடியேறுவதற்கான காரணங்கள்:

பொருளாதார வாய்ப்புகள்: நியூசிலாந்து குறைந்த வேலையின்மை, அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வலுவான வர்த்தக உறவுகளுடன் நிலையான, வளமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. நியூசிலாந்து, திறமையான புலம்பெயர்ந்தோருக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. 

சமூகப் பலன்கள்: நியூசிலாந்து, இலவச அல்லது மானியத்துடன் கூடிய சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் உயர்தர வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது. நியூசிலாந்து, குறைந்த குற்ற விகிதம், தூய்மையான சூழல் மற்றும் பன்முக கலாசார சமூகத்தையும் கொண்டுள்ளது. மனித மேம்பாடு, மகிழ்ச்சி, ஜனநாயகம் மற்றும் அமைதி ஆகியவற்றில் உலகின் சிறந்த நாடுகள் வரிசையில் நியூசிலாந்து  உள்ளது.

சுற்றுச்சூழல்: நியூசிலாந்தில் நான்கு வெவ்வேறு பருவங்கள் மற்றும் மிதமான வெப்பநிலையுடன் காலநிலை உள்ளது. நியூசிலாந்தில் மலைகள், ஏரிகள், காடுகள், கடற்கரைகள் மற்றும் எரிமலைகள் போன்ற பல்வேறு நிலப்பரப்புகளுடன் கூடிய அற்புதமான இயற்கை காட்சிகளும் உள்ளன.

நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் - தரவு

2018 நியூசிலாந்து மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் 239,193  இந்தியர்கள் உள்ளனர். இது நாட்டின் மக்கள்தொகையில் 4.7% ஆகும். இது பல்வேறு கட்டங்களில் இருந்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

பொருளாதாரம், சௌகரியமான வாழ்க்கை, அழகியல், கலாசாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள், நியூசிலாந்தில் குடிபெயர்வது கண்டறியப்படுகிறது.

New Zealand

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: