பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும். இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி வரி விலக்கும் கிடைக்கக்கூடியது. இதில் முதலீடு செய்கையில், குறிப்பிட்ட தேதியை பின்பற்றினால் நல்ல வருமானத்தை ஈட்டலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிபிஎஃப் ரூல்ஸ்படி, நீங்கள் அதிகப்பட்சமாக ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இதில் பணத்தை மொத்தமாகவும் அல்லது மாதந்தோறும் டெபாசிட் செய்யலாம்.
பெரும்பாலும் சம்பளதாரர்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வது வழக்கம். ஏனெனில், நிதியாண்டு இறுதியில் வரிவிலக்கிறகு உதவியாக அமைந்திடும்.
திட்டத்தில் அதிக லாபத்தை பெற, நிதியாண்டின் ஆரம்பமான ஏப்ரல் 1 முதல் 4க்குள் டெபாசிட் செய்ய வலியுறுத்தப்படுகிறது. இதே நடைமுறையை மீதமுள்ள மாதங்களிலும் பின்பற்ற வேண்டும். மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால், நல்ல லாபத்தை பெறலாம்.
காரணம்
PPF கணக்கிந் வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் இறுதியில் கணக்கில் செலுத்தப்படும். ஒவ்வொரு மாதத்திலும் ஐந்தாம் தேதிக்கு முன்பு, கணக்கில் உள்ள தொகைக்கு தான் வட்டி கணக்கிடப்படுகிறது.
வட்டி கணக்கீடு
பிபிஎஃப் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் கணக்கில் 5 ஆம் தேதி முதல் மாதத்தின் கடைசி தேதி வரையிலான தொகை தான் வட்டிக்கு கணக்கிடப்படுகிறது. இந்த வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்பட்டாலும், நிதியாண்டின் இறுதியில் தான் செலுத்தப்படும்.
நீங்கள் PPF இல் வருடாந்திர முதலீடு செய்ய விரும்பினாலும், அதிகப்பட்ச லாபத்திற்கு ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் செய்தாக வேண்டும்.
தற்போது, PPF திட்டமானது ஆண்டுக்கு 7.1% வட்டியை வழங்குகிறது. ஆண்டுதோறும் வட்டி கூட்டப்பட்டு 15 ஆண்டுகளில் திட்டம் முதிர்ச்சி அடையும் போது, வட்டி தொகையுடன் பணத்தை பெறலாம். இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு தங்களது கணக்கை கட்டாய முதிர்ச்சி காலத்திற்கு பிறகும் கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
முக்கியம்சமாக, பிபிஎஃப் டெபாசிட்டுகளுக்கு பிரிவு 80சியின் கீழ் வரிச் சலுகையைப் பெறலாம். அதில், கிடைக்கும் வட்டி தொகைக்கும், மொத்த முதிர்ச்சி தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிபிஎஃப் டெபாசிட்டுக்கான தற்போதைய வட்டி விகிதம் 7.1ஆகும். ஒருவர் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை சம்பாதிக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil