/tamil-ie/media/media_files/uploads/2021/04/epfo-money.jpg)
Widow Pension Scheme 2021 : கணவனை இழந்து வாழும் பெண்கள் தங்களின் சொந்த காலில் நிற்பதற்கும், பொருளாதார தேவைகளை யாரையும் நம்பாமல் பூர்த்தி செய்து கொள்ளவும் இந்திய அரசு கைம்பெண்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை வழங்குகிறது. அவர்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை இந்த திட்டம் வழங்கும்.
வறுமை கோட்டிற்கு கீழே உள்ள, கணவர்களை இழந்த 18 முதல் 60 வயது பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவிக்கு விண்ணப்பிக்கும் பெண் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 என்று அரசு நிர்ணயித்திருப்பதால் இது கட்டாயமாகிறது. கணவரை இழந்த பெண் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று விதியின் அடிப்படையிலும், குழந்தைகள் அவரை கவனித்துக் கொள்ளும் வயது வராத தாய்மார்களும் இந்த நிதி உதவியை பெற முடியும்.
மாதந்தோறும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த ஓய்வூதியத்தை அவரின் குழந்தைகளோ அல்லது இதர குடும்ப உறுப்பினர்களோ வாங்க முடியாது.
ஆதார் அடையாள அட்டை, கணவரின் இறப்பு சான்றிதழ், முகவரிக்கான அடையாள அட்டை, வருமான சான்றிதழ், வயது சான்று, அலைபேசி எண், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை கொடுத்து இந்த நிதி தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசு நேரடியாக பயனாளரின் வங்கி கணக்கிற்கு மாதம் மாதம் பணம் வரவு வைக்கும். சில மாநிலங்களில் இந்திரா காந்தி விதவை ஓவ்யூதிய திட்டம் 40 முதல் 60 வயது பெண்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.