மிகப் பெரிய அளவிலான பங்குச் சந்தை சரிவுக்குப் பிறகு முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி இருவரும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரிய சரிவு இந்தியாவின் பெரும் பணக்காரர்காள் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பை பாதித்துள்ளது. இருவரும் டாப் பில்லியனர்கள் பட்டியலில் சரிவை சந்தித்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக, இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ்-நிஃப்டியில் வியாழக்கிழமை பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் கௌதம் அதானியின் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் மோசமாக சரிந்து 3.95% சரிவுடன் 2813.95 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது.
அதே போல, பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், கௌதம் அதானியின் நிகர மதிப்பு 2.93 பில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ. 24,600 கோடி குறைந்து 100 பில்லியன் டாலராக இருந்தது.மேலும், உலகப் பணக்காரர்களின் பட்டியலில், அவர் 14வது இடத்திலிருந்து 17வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அதாவது பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானிக்கு ரூ.36,000 கோடியும் கௌதம் அதானிக்கு ரூ.24,000 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“