அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் இம்மாத இறுதியில் திருத்தம் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 2020 முதல் PPF இன் வட்டி விகிதத்தை மத்திய அரசு திருத்தவில்லை, 7.1 சதவீதமாகவே தொடர்கிறது.
அதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) உள்ளிட்ட பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் கடந்த இரண்டு காலாண்டுகளில் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் PPF வட்டி உயர்த்தப்படுமா என்பதை அறிய, வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை, சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் இரண்டாம் நிலை சந்தையில் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் ரிட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“