கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் எப்படி தெரியுமா?

தங்கள் மொபைல் மூலமாகவே அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும்.

By: Updated: September 8, 2018, 12:40:46 PM

ஏர்டெல் பேமெண்ட் வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனிமேல் கார்ட் இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம்:

ஏர்டெல் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சேவையை தொடங்குவதற்கான முழு விபரத்தையும் ஏர்டெல் நிறுவனம்வெளியிட்டுள்ளது. முதலில் வாடிக்கையாளர்கள் ஐஎம்டி வசதி கொண்டுள்ள ஏ.டி.எம்மிற்கு சென்று, மை ஏர்டெல் ஆப் மூலம் ‘கேஷ் வித்ட்ராயல்’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்பு அதில் மொபைல் எண்ணை பதிவு செய்து, உங்களுக்கு வரும் ஒடிபியை அதில் பதிவிட்டு செல்ஃப் வித்ட்ராயல் ஆப்ஷன் மூலம் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு பண பரிவர்தனைகள் இலவசமாக அளிக்கபப்டும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, 25 ரூபாய் பரிவர்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 20,000 ஏ.டி.எம்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 1,00,000 ஏ.டி.எம்களில் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது

டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுள்ளதாக ஏர்டெல் தலைமை இயக்குனர் அனுபிரதா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஏ.டி.எம்-களில் தங்கள் மொபைல் மூலமாகவே அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும். இந்த வசதியை ஏ.டி.ஏம்-மில் சொந்தமாகப் பணம் எடுப்பதற்கும் பயன்படுத்தலாம், ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க நிற்கும் இன்னொருவருக்காகவும் பயன்படுத்தலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Withdraw card less cash at atms

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X