பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை ஆகஸ்ட் 15, 2014 அன்று தனது முதல் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
தொடர்ந்து இந்தத் திட்டம் அதே மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வங்கித் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் காப்பீடு, நிதி சேவை கிடைப்பதை உறுதி செய்கிறது.
இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தால் கூட ரூ.10 ஆயிரம் ஓவர் டிராஃப்ட் கடனாக பெறலாம். இதற்கு கணக்கு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.
முன்பு இந்த ஓவர் டிராஃப்ட் ரூ.5 ஆயிரமாக இருந்தது. தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் வரை ஓவர் டிராஃப்ட் எவ்வித நிபந்தனையும் கிடையாது.
இந்த ஓவர் டிராஃப்ட் (OD) பெறும் வயது வரம்பு 60இல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் பென்ஷன் யோஜனா (APY), மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி (MUDRA) திட்டங்களின் நேரடி பண பரிமாற்றத்துக்கும் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு தகுதியுடையது ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”